ஆண்பிரதியும் பெண் பிரதியும்

ஆண்பிரதியும் பெண் பிரதியும் - சமயவேல்; பக்.160; ரூ.150; மணல்வீடு இலக்கிய வட்டம், ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்-636453.
ஆண்பிரதியும் பெண் பிரதியும்

ஆண்பிரதியும் பெண் பிரதியும் - சமயவேல்; பக்.160; ரூ.150; மணல்வீடு இலக்கிய வட்டம், ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்-636453.
பல்வேறு சிற்றிதழ்களில், இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளும், கரீபியக் கவிஞர் டெரெக் வால்காட் பற்றியும், தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் பற்றியும் எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 
ந.முத்துசாமி, எஸ்.இராமகிருஷ்ணன், சோ.தர்மன், அய்யப்ப மாதவன், சி.மோகன், லீனா மணிமேகலை, சந்திரா, பெருந்தேவி என தமிழ் இலக்கிய வாசகர்களால் நன்கறியப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றியும், யுகியோ மிஷிமா, ஸர்மிளா ùஸய்யித் என அதிகம் அறியப்படாத படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றியும் நூலாசிரியரின் பார்வைகள் இந்நூலில் பதிவாகியுள்ளன. 
படைப்புகளைப் பற்றிய - படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகமாகவே இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் உள்ளன. படைப்புக்கும் சமூகத்துக்குமான உறவு, படைப்பாளியின் சமூகக் கடமை, ஒரு படைப்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ற அடிப்படையில் படைப்புகளை விமர்சனரீதியாகப் பார்க்கும் பார்வை இந்நூலில் குறைவாகவே இருக்கிறது. ஒரு படைப்பை வாசிக்கும்போது நூலாசிரியருக்கு ஏற்பட்ட ரசனை சார்ந்த அனுபவங்களே இந்நூலில் உள்ள கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. எனினும் பலராலும் அறியப்படாத படைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com