இன்றும் இனிக்கிறது நேற்று 

இன்றும் இனிக்கிறது நேற்று - கவிக்கோ ஞானச்செல்வன்; பக்.216; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
இன்றும் இனிக்கிறது நேற்று 

இன்றும் இனிக்கிறது நேற்று - கவிக்கோ ஞானச்செல்வன்; பக்.216; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
 இஃது ஒரு தன் வரலாற்று நூல். நூலாசிரியரின் அறுபதாண்டு தமிழ்ப்பணியில் அவருக்கு நேரிட்ட சில நிகழ்வுகளைப் பற்றிய, அவர் சந்தித்த சில மனிதர்களைப் பற்றிய தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
 இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று எம்.ஜி.ஆர். கையால் இந்நூலாசிரியர் பொற்பதக்கம் பெற்ற நிகழ்வோடு தொடங்குகிறது இந்நூல்.
 மதுக்கூர் என்ற சிற்றூரில் நடந்த நூலாசிரியரின் திருமணத்திற்கு ம.பொ.சி. நேரில் வந்து வாழ்த்திப் பேசியது, நூலாசிரியர் ஒரத்தநாடு பள்ளியில் பயின்றபோது ஏற்பட்ட இயற்கைப் பேரிடரின்போது ஒரத்தநாட்டிலிருந்து மதுக்கூருக்கு நடந்தே சென்றது, கம்பரையும், ராமரையும் சீதையையும் தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருந்த உள்ளூர் நண்பர் ஒருவர், நூலாசிரியரின் கம்பராமாயண கருத்துகளைப் படித்து, கம்பன் கழகம் நிறுவும் அளவுக்கு கம்பரை ஏற்றுப் போற்றியது என பல செய்திகள் மிகவும் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன
 மேலும் எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வாலி, நாடக ஆசிரியர் "சோ' ராமசாமி போன்றோருடனான சந்திப்புகளும் சிறப்பு. தன் வரலாற்று நூல்கள் பெரும்பான்மையும் சுவையாக இருப்பதில்லை; சுவையான நூல்களின் உண்மைத்தன்மை ஐயப்பாட்டுக்குரியது. ஆனால் இந்நூல் உண்மையும் சுவையும் நிரம்பியதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com