திருமூலர் திருமந்திரம் - தொன்மையின் மீட்டெடுப்பு - கடவுள் வாழ்த்து

திருமூலர் திருமந்திரம் - தொன்மையின் மீட்டெடுப்பு - கடவுள் வாழ்த்து - ச. இரா. தமிழரசு; பக்.144; ரூ.250; ஆதவன் பதிப்பகம், சென்னை-91; 044- 4951 2126.
திருமூலர் திருமந்திரம் - தொன்மையின் மீட்டெடுப்பு - கடவுள் வாழ்த்து

திருமூலர் திருமந்திரம் - தொன்மையின் மீட்டெடுப்பு - கடவுள் வாழ்த்து - ச. இரா. தமிழரசு; பக்.144; ரூ.250; ஆதவன் பதிப்பகம், சென்னை-91; 044- 4951 2126.
சைவ சமயத்தின் கருவூலமாகக் கருதப்படும் பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். சித்தராகிய திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடினார் என்று கூறப்படுகிறது. திருமந்திரத்தில் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பட்டுள்ள ஐம்பது பாடல்களையும் இந்நூலாசிரியர் ஆராய்ந்து ஒவ்வொன்றுக்கும் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
கடவுள் வாழ்த்தின் முதல் பாடலான "ஒன்றவன் தானே இரண்டவன் நின்னருள்' என்று தொடங்கும் பாடலுக்கு விளக்கம் கூறும் நூலாசிரியர், "அறிவு ஒன்றுதான். அது பேரறிவு. அதுதான் நம் உடலில் அமைந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. அதனை விளக்குவதுதான் இப்பாடல்' என்று கூறுகிறார். இப்படியே ஐம்பது பாடல்களுக்கும் அறிவியல்பூர்வமாகவும், மருத்துவரீதியாகவும் விளக்கமளித்துள்ளார். 
திருமந்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு இந்நூலாசிரியர் கூறும் கருத்துகள் வியப்பளிக்கக்கூடும். உதாரணமாக, "நின்றனன் மூன்றினுள்' என்பதற்கு நமது உடலை மேம்படுத்தும் மூன்று சுரப்பிகள் என்றும், "சட்டையிலான்' என்பது நாளமிலாச் சுரப்பிகளைக் குறிப்பதாகவும், "கண்ணுதலான்' என்பதற்கு நெற்றியிலே கண் உள்ளவன் என்பது மட்டும் பொருளன்று; சிவனின் முன் உள்ள ஈசன், அதாவது பீனியல் சுரப்பி என்பதே அதன் உண்மைப் பொருள் என்றும், "தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே' என்பதில் உள்ள "நன்றாக' என்பதற்கு "குறிப்பு' என்று பொருள். அதாவது தமிழை வெளிப்படையாக எழுதாமல் குறிப்பாக எழுத வேண்டும் என்று கூறுகிறார் திருமூலர் - இப்படியாக ஐம்பது பாடல்களையும் விளக்கியுள்ளார். திருமந்திரத்திற்கு இதுவரை ஆன்மிக உலகம் அறிந்து வைத்திருந்த பொருளை மாற்றி மருத்துவ உலகின் பார்வையில் சிந்தித்திருக்கிறார் நூலாசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com