தமிழ்ப் புதுக்கவிதைகளில் பாரதியும் ந.பிச்சமூர்த்தியும்

தமிழ்ப் புதுக்கவிதைகளில் பாரதியும் ந.பிச்சமூர்த்தியும் - ப.முருகன்; பக்.128; ரூ.100; கங்காராணி பதிப்பகம், மனை எண்.60, கதவு எண் 3/373, தொல்காப்பியர் தெரு, சண்முகாநகர், பொழிச்சலூர், சென்னை-74.
தமிழ்ப் புதுக்கவிதைகளில் பாரதியும் ந.பிச்சமூர்த்தியும்

தமிழ்ப் புதுக்கவிதைகளில் பாரதியும் ந.பிச்சமூர்த்தியும் - ப.முருகன்; பக்.128; ரூ.100; கங்காராணி பதிப்பகம், மனை எண்.60, கதவு எண் 3/373, தொல்காப்பியர் தெரு, சண்முகாநகர், பொழிச்சலூர், சென்னை-74.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கவிதைக்கான இலக்கணங்களைத் தவிர்த்து புதிய நடையில் கவிதைகள் எழுதிப் பார்த்தவர் பாரதியார். புதுக்கவிதையுலகில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ந.பிச்சமூர்த்தி. இவ்விருவரும் புதுக்
கவிதைகளை எவ்வாறெல்லாம் கையாண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்நூல். 
இப்படி ஒரு நூல் எழுதப்பட்டதன் நோக்கம், இரு கவிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், புதுக்கவிதை பங்களிப்புகள், இருவருக்குமிருந்த சொல்லாளுமை, மொழியாளுமை மற்றும் இருவருடைய கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள சொல்லடைவுகள் என தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்து விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
பாரதியார் வசனக் கவிதைகளாக ஏராளமாக எழுதியிருந்தாலும் அவற்றுள் எளிய பதங்கள், சிறந்த கருத்துகள் அமைந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் நூலாசிரியருக்கு பாரதியிடமுள்ள ஈடுபாடு புலனாகிறது. 
இன்று புதுக்கவிதைத்துறை பெரிதும் வளர்ச்சியடைந்து விட்டாலும் இன்றும் புதுக்கவிதையின் பிதாமகன் எனக் கருதப்படுபவர் ந. பிச்சமூர்த்தியே. அதற்குக் காரணம், அவர் எளிய மனிதர்களின் வாழ்க்கையேக் கூர்ந்து நோக்கி அவர்களின் அனுபவங்களைப் புதுக்கவிதையாக வடித்ததுதான். 
ஆழமான கருத்துகளைக்கூட எளிமையாகக் கூறமுடியும் என்பதற்கு உதாரணம் ந. பிச்சமூர்தியின் கவிதைகள்.
தமிழில் முதல்முதலில் புதுக்கவிதை எழுதிய பாரதியாரையும் புதுக்கவிதைத் துறையில் முன்னோடியான ந. பிச்சமூர்த்தியையும் ஒப்பிட்டுச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். தமிழில் ஒப்பீட்டிலக்கியம் வளர இதுபோன்று மேலும் பல ஒப்பீட்டு நூல்கள் வரவேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com