ஆதார் சட்டம்

ஆதார் சட்டம் - பி.ஆர்.ஜெயராஜன்; பக்.248; ரூ.210; சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், 69/42-சி, மீனாட்சி நகர், அஸ்தம்பட்டி, சேலம்- 636007.
ஆதார் சட்டம்

ஆதார் சட்டம் - பி.ஆர்.ஜெயராஜன்; பக்.248; ரூ.210; சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், 69/42-சி, மீனாட்சி நகர், அஸ்தம்பட்டி, சேலம்- 636007.
 செல்லிடப்பேசி எண் தொடங்கி சிலிண்டர் மானியம் பெறுவது வரை ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகிக் கொண்டிருக்கிறது.
 ஒன்று இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்துவ அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும் அதை அதிகாரப்பூர்வமாக்க வேண்டும். இதற்காக அனைவரது சமுதாயநிலை, உயிரளவைத் தகவலை ( பயோமெட்ரிக் இன்ஃபர்மேஷன் ) பதிவு செய்ய வைக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு தனித்துவமான எண் ஒன்றை வழங்க வேண்டும்.
 மற்றொன்று, மானியங்கள்- அரசின் திட்டங்கள், சேவைகள் யாருக்காகக் கொண்டுவரப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு முறையாகச் சென்றடைய வேண்டும். அரசு வழங்கும் சேவையை ஒருவரே இரண்டு முறை பெற்றுவிடக்கூடாது என்பதாகும். இதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதே ஆதார் சட்டமாகும்.
 ஆதார் சட்டம் வரைமுறைகள், பதிவாக்கல், இந்திய தனித்துவ அடையாள அதிகார அமைப்பு, தகவலைப் பாதுகாத்தல், ஆதார் சட்ட ஒழுங்குமுறை விதிகள் என இதிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஆதார் குறித்த முழுமையான விளக்கங்கள் உரிய வரையறைகளுடன் அளிக்கப்பட்டுள்ளன. நூலின் பல பகுதிகளில் சட்டத்தின் ஆங்கில மூலமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com