பெரியபுராணம் சில சிந்தனைகள்

பெரியபுராணம் சில சிந்தனைகள் -அரங்க. இராமலிங்கம்; பக்.160; ரூ.100; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
பெரியபுராணம் சில சிந்தனைகள்

பெரியபுராணம் சில சிந்தனைகள் -அரங்க. இராமலிங்கம்; பக்.160; ரூ.100; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 பெரியபுராணம் தொடர்பாக நூலாசிரியர் அவ்வப்போது மேடைகளில் நிகழ்த்திய எட்டு சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். பெரியபுராணம், திருத்தொண்டர்களின் வரலாறு, தமிழர்தம் வாழ்வியல் நெறிமுறைகள், அடியார்களின் கொள்கை உறுதிப்பாடு முதலியவற்றை விரித்துரைக்கிறது.
 "இறைப்பணியில் தொண்டாற்றும் அடியார்கள் ஒற்றுமையுடன் தொண்டாற்ற வேண்டும் என்பதை பத்து நாயன்மார்கள் மூலம் சேக்கிழார் வலியுறுத்தியுள்ளமை; சைவம் தழைக்கப் பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தமை; காப்பியக் கவிஞர்கள் யாரும் செய்யாத புதுமையும் புரட்சியுமான கள ஆய்வை சேக்கிழார் மேற்கொண்டது; அறம் சார்ந்த கருத்துகள், ஒழுக்க நெறி உண்மைகள் எனப் பலவற்றையும் தமது காப்பியத்தில் பதிவு செய்துள்ளது; திருக்கயிலைக்குச் சென்ற முதல் பெண் அடியார் காரைக்கால் அம்மையார்தான் என்பது; வரலாற்றுணர்வுடன் தம் காப்பியத்தை இயற்றும்போது திருமுறைகளையும் துணையாகக் கொண்டது; மனுநீதி சோழன் பற்றி "திருநகரச் சிறப்பில்' உள்ள குறிப்பில் சில ஐயங்களை எழுப்பியுள்ளது; திருஞானசம்பந்தரின் ஆளுமைத் திறன்கள் மிளிரும் இடங்களைச் சுட்டிக்காட்டிருப்பது; சேக்கிழாரின் தமிழ்நூற் புலமை; சேக்கிழார் பதிவு செய்துள்ள சைவ சித்தாந்தம்; நல்வரவு(வெல்கம்), மருங்குவழி-(பைப்பாஸ்), பணிமாறல்(ஷிப்ட்), தொழிலாளர் (சர்வென்ட்) முதலிய தமிழ்ச் சொற்களை சேக்கிழார் உருவாக்கித் தந்தமை எனப் பெரியபுராணம் கூறும் நுட்பமான தகவல்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
 "தன்னை இழந்த நலம்'தான் பெரியபுராணத்தின் சாரம் என்பதையும் ஒரு கட்டுரையின் மூலம் கூறி முடித்துள்ளார். "பெரியபுராணம் சில சிந்தனைகள்' அல்ல, பல சிந்தனைகளுக்குத் தீனி போடுகிறது இச்சிறிய கையேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com