இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்; தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்; பக்.384; ரூ.350; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044 - 4200 9603.
இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்; தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்; பக்.384; ரூ.350; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044 - 4200 9603.
 முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சமஸ்தானங்களாகச் சிதறுண்டு கிடந்த பல பகுதிகளை பிரிட்டிஷார் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய பகுதிகளின் பொருளாதாரத்தைச் சுரண்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்தினர்.
 "இந்திய பருத்தியைக் கைப்பற்றிக் கொண்டு சென்று, முழுமை அடைந்த உடைகளாகத் திரும்பவும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தனர்'. ரயில் போக்குவரத்து வந்த பிறகு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்த உபரிகள் சுரண்டப்பட்டன. நகர்ப்புற பெரும் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களுடன் இந்திய விவசாயிகள் போட்டியிடும் நிலை ஏற்பட்டது.
 இந்தியாவில் பிரிட்டிஷார் தங்களுக்காகவே தேயிலையை வளர்த்தார்கள். டார்ஜிலிங் தேயிலை, அசாம் தேயிலை, நீலகிரித் தேயிலை எல்லாம் ஸ்காட்லாந்து முதலாளிகளால் பயிரிடப்பட்டன.
 இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை பிரிட்டிஷார் அழித்தது, பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களை, எதிர்ப்புகளை பல்வேறு சட்டங்கள் மூலம் ஒடுக்கியது, 1866 ஒரிசா பஞ்சத்தில் மொத்தம் 15 லட்சம் பேர் பட்டினியால் இறந்தநிலையில், சுமார் 10 கோடி கிலோ அரிசியை (20 கோடி பவுண்டு) பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்தது, மத, இன வேற்றுமைகளைத் தூண்டிவிட்டு மக்களிடையே வெறுப்பை வளர்த்தது, பிரிட்டிஷாரின் நலன்களுக்கு உகந்த கல்விமுறையைத் திணித்தது என பிரிட்டிஷ் ஆட்சியாளரின் செயல்களை எல்லாம் மிக விரிவாக அலசி ஆராய்கிறது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com