ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்

ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம் - சுப.உதயகுமாரன்; பக்.95; ரூ.90; வல்லமை, நாகர்கோவில்; )04652 - 278525.
ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்

ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம் - சுப.உதயகுமாரன்; பக்.95; ரூ.90; வல்லமை, நாகர்கோவில்; )04652 - 278525.
சமூகத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? வீடுதான் மனித வாழ்வின் அடித்தளமாக அமைகிறது. அனைத்து வீடுகளையும் சேர்த்துதான் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புகிறோம். அன்பையும், அறத்தையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் இடங்களாக வீட்டை மாற்ற வேண்டும். அப்போதுதான் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 
இன்றைய வீடு எப்படி இருக்கிறது? வீட்டில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள, அவர்கள் பேச்சு, சிந்திக்கும்முறை, புரிந்து கொள்ளும் முறை, செயல்கள் ஆகியவற்றில் எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்? என்று இந்நூல் விளக்குகிறது.
சமூகத்தில் பெண்களைப் பற்றிய மதிப்பீடுகள், கருத்துகள் எவ்விதம் இருக்கின்றன? காதல், கற்பு, காமம் போன்றவற்றில் பெண்களின் உணர்வுகள், எண்ணங்கள் மதிக்கப்படுகின்றனவா? மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி? பணத்தைச் சம்பாதிப்பது, சேர்ப்பது எவ்வாறு? என குடும்பங்களை உயர்த்துவதற்கான பல வழிகள் மிகுந்த சமூக அக்கறையுடன் இந்நூலில் அருமையாக விளக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், சமூகத்தில் உள்ள பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று கூறும் நூல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com