பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் -  இரா.மோகன்,  நிர்மலா மோகன்;  பக்.184; ரூ.120, வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810. 
பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் -  இரா.மோகன்,  நிர்மலா மோகன்;  பக்.184; ரூ.120, வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810. 
இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழும் பின்னி பிணைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.
முத்தமிழ், மூவேந்தர்,
மூன்று தலைநகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாலும், அமைப்பாலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ரத்தினச் சுருக்கமாக தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம்.
சிலப்பதிகாரம் முழுவதும் காணப்படுகின்ற பன்முகத் தன்மை குறித்து நூலாசிரியர் ஆராய்ந்து சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தமிழறிஞர்கள் மற்றும் பிற நாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி ஒப்பிட்டும் விளக்குகிறார்.
பண்டிய மன்னன் அரசவையில் கண்ணகி உடைத்த சிலம்பு எது என்பது குறித்து அறிஞர்கள் பலர் இதுவரை பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.இந்நிலையில், சிலம்பு குறித்து அக்காப்பியத்தில் வரும் நாடக மாந்தர்கள் அவரவர் அறிவாற்றல், பண்பு நலன், வாழ்க்கை நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப நோக்குகின்றனர் என்பதை ஆராய்ந்து கூறியுள்ளார்.
தமிழ் கூறும் நல்லுலகில் சிலப்பதிகார ஆய்வுக்கு முக்கியத்துவம் அளித்த ம.பொ.சி., மு.வ., தி.சு.நடராஜன் ஆகியோரின் பங்களிப்பு குறித்தும் எடுத்தியம்புகின்றார்.  
இந்நூல் தமிழறிஞர்கள், கல்லூரி மாணவர்கள்,ஆய்வாளர்கள் மட்டுமின்றி சிலப்பதிகாரம் குறித்து தெரிந்து கொள்ள நினைக்கும் பிற துறை மாணவர்கள் மற்றும் தமிழறிஞர்களுக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com