கலாக்ஷேத்ரா  -  ருக்மிணிதேவி -  சில நினைவுகள்  -  சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா  -  ருக்மிணிதேவி -  சில நினைவுகள்  -  சில பகிர்வுகள்; ஆங்கில மூலம்: எஸ். சாரதா; தமிழில்: கிருஷாங்கினி; பக்.384;  ரூ.300; சதுரங்கம் பதிப்பகம்,  சென்னை - 47; 044 - 2223 1879. 
கலாக்ஷேத்ரா  -  ருக்மிணிதேவி -  சில நினைவுகள்  -  சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா  -  ருக்மிணிதேவி -  சில நினைவுகள்  -  சில பகிர்வுகள்; ஆங்கில மூலம்: எஸ். சாரதா; தமிழில்: கிருஷாங்கினி; பக்.384;  ரூ.300; சதுரங்கம் பதிப்பகம்,  சென்னை - 47; 044 - 2223 1879. 
உலகப் பிரசித்தி பெற்ற கலாக்ஷேத்ரா என்னும் இந்திய பாரம்பரியக் கலைக் கல்வி மையத்தைப் பற்றியது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் ஈடு இணையற்ற அந்தக் கலை மையத்தை உருவாக்கிய ருக்மிணிதேவி பற்றிய வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. 
கலாக்ஷேத்ராவில் சேர்ந்து கலை ஞானத்துக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்த எஸ். சாரதா எழுதிய ஆங்கில மூல நூலின் தமிழ் மொழி மாற்றமாக இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிறது. 
கலாக்ஷேத்ரா உருவான ஆண்டு 1936. காரைக்குடி சாம்பசிவ ஐயர்,  பாபநாசம் சிவன் போன்ற உன்னத கலைஞர்கள் தொடர்பான சம்பவங்கள் சுவையாக அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் தியாகய்யர் என்று புகழ் பெற்ற பாபநாசம் சிவன், ருக்மிணிதேவியின் ஆரம்ப கால நாட்டிய நாடகங்களுக்கு எவ்வாறு ஆழ்ந்து ஈடுபட்டுப் பாடியுள்ளார், அந்த நிகழ்ச்சிகளில் மேடையில் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் போன்ற விவரங்கள் முக்கிய வரலாற்றுப் பதிவுகள்.
பரதநாட்டியம் போன்ற இந்திய பாரம்பரிய நடனங்கள் அடிப்படையில் பாடங்கள் நடைபெற்றாலும், "கலாக்ஷேத்ரா பாணி' உருவான விதம் பற்றிக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இங்கு பயின்ற பல கலைஞர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கலைப் பிரிவில் நல்ல தேர்ச்சி பெற்றவராக மிளிர்ந்துள்ளனர்.
பல புராண, இதிகாச நாட்டிய நாடகங்கள், "குற்றாலக் குறவஞ்சி' நாட்டிய நாடகம் போன்றவை எப்படி உருவாகின என்று சுவையாகக் கூறுகிறார்.  
கலை விஷயத்துக்குத் தேவையான முழு ரசனையுடனும் ஈடுபாட்டுடனும் எழுதப்பட்ட புத்தகம். பல அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன. அரிய  வரலாற்றுப் பதிவு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com