இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள் - தொகுப்பாசிரியர்: மு.சாயபு மரைக்காயர்; பக்.504; ரூ.400; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள் - தொகுப்பாசிரியர்: மு.சாயபு மரைக்காயர்; பக்.504; ரூ.400; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
 குறிப்பிடத்தக்க இஸ்லாமிய படைப்பாளிகளான ஜெய்புன்னிசா, தாழை மதியவன், குணங்குடி மஸ்தான் சாகிபு, கா.மு.ஷெரீப், மு.சாயபுமரைக்காயர், நசீமா பானு, மீரான் மைதீன், சல்மா, அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலருடைய படைப்புகளில் காணக் கிடைக்கும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றி பேசும் நூல். 77 கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் பெண்ணுரிமை தொடர்பான இஸ்லாமிய நெறி என்ன என்பதைப் பல கட்டுரைகள் விளக்குகின்றன.
 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்களில் நிறைய ஆண்கள் கொல்லப்பட்டதால், பெண்கள் ஆண்துணையின்றி தனிமைப்படுத்தப்பட்டனர். சமூகம் தீயவழியில் செல்ல நேர்ந்தது. இதனால் பலதாரமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. "இத்தகைய திருமணங்கள் இன்றைய காலகட்டத்தில் பொருந்தாத ஒன்றாகும். அவ்வாறு திருமணம் செய்து கொண்டு வாழ்வது சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கே தவிர, கட்டாயமில்லை' என்று இஸ்லாத்தில் பலதார மணமுறை பற்றி ஒரு கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
 இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று ஒரு கட்டுரை வற்புறுத்துகிறது. கல்விக்காகப் போராடும் மலாலாவின் போராட்ட வாழ்க்கையை ஒரு கட்டுரை சொல்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் தீரமாக பங்கெடுத்த இஸ்லாமியப் பெண்களின் வீர வரலாற்றைச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.
 இஸ்லாமிய நெறியில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்; பெண் கல்வி மறுக்கப்படுகிறது என்பன போன்ற பல எதிர்மறையான கருத்துகளில் உண்மையில்லை என்பதை இந்நூலில் உள்ள கட்டுரைகள் அழுத்தமாக விளக்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com