வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை - இஸ்மத் சுக்தாய்; தமிழில்: சசிகலா பாபு; பக்.404; ரூ.400; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-2; )04259 - 226012.
வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை - இஸ்மத் சுக்தாய்; தமிழில்: சசிகலா பாபு; பக்.404; ரூ.400; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-2; )04259 - 226012.
 இஸ்மத் சுக்தாய் 1911இல் உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். உருது மொழியில் அவர் பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். பெண்ணியச் சிந்தனைகள் வளராத அக்காலத்திலேயே அவர் சுதந்திரமான கருத்துகளை உடையவராக இருந்திருக்கிறார். அவர் உருதுவில் எழுதிய "காகஸி ஹை பைரஹன்' என்ற சுயசரிதையின் தமிழ் வடிவம் தான் இந்நூல்.
 வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்தியபோது, அதை மறுத்து பிடிவாதமாக உயர் கல்வி கற்கச் சென்றிருக்கிறார்.
 இஸ்மத் சுக்தாய் தொடக்க காலத்தில் எழுதிய "லிஹாஃப்' என்ற சிறுகதை பலத்த எதிர்ப்புகளை அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. அவரை ஆபாச எழுத்தாளராகப் புரிந்து கொண்டு கடுமையான விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. அவருக்கு அருவருப்பான கடிதங்கள் பல வந்தன. நீதிமன்ற வழக்குகளை அதற்காக அவர் சந்திக்க வேண்டியிருந்தது. குடும்பத்திலும் அதனால் பிரச்னைகள் எழுந்தன. எனினும் அவர் கொண்ட கருத்தில் உறுதியாக இருந்திருக்கிறார்.
 பெண்கள் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் ஒடுக்கப்படுவதை - ஒரு பெண் என்ற முறையில் உணர்ந்து, அதற்கு எதிராகப் போராடுபவராக இஸ்மத் சுக்தாய் இருந்திருப்பது வியப்பளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com