83. பெருந்திரு இமவான் - பாடல் 7

காப்பாற்ற வேண்டும்
83. பெருந்திரு இமவான் - பாடல் 7


பாடல் 7:


    சுற்று முன் இமையோர் நின்று தொழுது
                                                        தூமலர்கள் தூவி
    மற்று எமை உயக்கொள் என்ன வான்புரங்கள்
                                                       மூன்றும்
    உற்று ஒரு நொடியில் முன்னம் ஒள்ளழல்
                                                       வாயின் வீழச்
    செற்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச்
                                                       செல்வனாரே


விளக்கம்:


மன்னுவான் புரங்கள்=ஆகாயத்தில் நிலையாக பறந்து கொண்டிருந்த கோட்டைகள்; எதிர்த்து நின்று அழிப்பவர் இல்லாமையால், நிலையாகத் தோன்றியவை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

ஒரு காலத்தில் தம்மைச் சுற்றி தேவர்கள் நின்று, தூய்மையான மலர்கள் தூவி தொழுது, இறைவனே நீங்கள் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்ட, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான், எதிர்த்து நின்று அழிப்பவர் எவரும் இல்லாமல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த மூன்று வலிமையான கோட்டைகளையும், உற்று நோக்கி ஒரே நொடியில், அந்த கோட்டைகள் தீக்கு இரையாகுமாறு அழித்து தேவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தார். அத்தைகைய வல்லமையும் கருணை உள்ளமும் கொண்டவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com