49. பண்காட்டி படியாய - பாடல் 9

பன்றி வடிவம் எடுத்து திருமாலும்

ஏன வேடத்தினானும் பிரமனும்
தான வேடம் முன் தாழ்ந்து அறிகிலா
ஞான வேடம் விசயற்கு அருள் செயும்
கான வேடன் தன் வெண்காடு அடை நெஞ்சே
 

விளக்கம்

ஏன வேடம் = பன்றி உருவம். தானவேடம் = தான் அவ்வேடம், அனலாகிய அந்த வேடம். ஞான வேடம் = ஞானமே உருவாகிய வேடம். தங்களது வலிமையில் செருக்கு கொண்டு பெருமானின் அடியையும் முடியையும் காணலாம் என்று முயற்சி செய்த பிரமன் மற்றும் திருமாலுக்கும், பெருமானைக் குறித்து தவம் செய்த அர்ஜுனனுக்கும் உள்ள வேற்றுமை இங்கே உணர்த்தப்பட்டு, எந்த வழி பயனளிக்கும் வழி என்பது தெளிவாக கூறப்படுகின்றது.

பொழிப்புரை

பன்றி வடிவம் எடுத்து திருமாலும் அன்னத்தின் வடிவம் எடுத்து பிரமனும், தீப்பிழம்பாக நின்ற பெருமான் வேடத்தின் அடியையும் முடியையும் காண்பதற்கு தாழ்ந்தும் பறந்தும் சென்று முயற்சி செய்தபோதிலும் ஞானமே வடிவாகிய பெருமானது உருவத்தின் அடியையும் முடியையும் அவர்களால் அறிய முடியவில்லை. காட்டில் வாழும் வேடுவன் உருவத்தினைக்கொண்டு, அர்ஜுனனுக்கு அருள் செய்த பெருமான் உறையும் வெண்காட்டு தலத்தினை அடைந்து அவனை வணங்கி, நெஞ்சமே நீ வாழ்வினில் உய்வினை அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com