87. உயிராவணம் இருந்து - பாடல் 3

உன்னை வாழ்த்தி
87. உயிராவணம் இருந்து - பாடல் 3


பாடல்  3

    தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ்
                      புன்சடை மேல் திங்கள் சூடிக்
    காரூரா நின்ற கழனிச் சாயல் கண்ணார்ந்த
                     நெடுமாடம் கலந்து தோன்றும்
    ஓரூரா உலகெலாம் ஒப்பக் கூடி உமையாள்
                     மணவாளா என்று வாழ்த்தி
    ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்
                     தம் பெருமானே எங்குற்றாயே

    

விளக்கம்:


தேரூர், மாவூர், திங்களூர் மூன்றும் வைப்புத் தலங்கள். பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் இடம் பெறாமல், ஏதேனும் ஒரு பாடலில் குறிப்பிடப்படும் தலங்கள், வைப்புத் தலங்கள் என்று அழைக்கப்படும். தேரூரார் என்பதற்கு தேர் ஊரார் என்று பிரித்து, தேர், குதிரை ஆகியவற்றை வாகனமாகக் கொள்ளாதவர் என்று பொருள் சொல்வதுண்டு. கார்=நீர். காரூரா நின்ற கழனி என்று தலத்தின் நீர்வளம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரூரா உலகெல்லாம்=உலகெல்லாம் ஒவ்வொரு ஊராக 
 
பொழிப்புரை:

தேரூர், மாவூர், திங்களூர் ஆகிய தலங்களில் உறையும் இறைவனே, ஒளி திகழும் செஞ்சடை மேல் திங்கள் சூடியவனே, நீர்வளம் நிறைந்த வயல்களும், கண்களுக்கு அழகாக காட்சி தரும் நெடிய மாடங்களும் நிறைந்த பல தலங்களில் நீ உறைகின்றாய். நீ உண்மையில் எங்கே இருக்கின்றாய் என்று உலகில் உள்ளவர்கள் எல்லாம் ஒவ்வொரு ஊராகச் சென்று, உமையாள் மணவாளா என்றும் ஆரூரா ஆரூரா என்றும் உன்னை வாழ்த்தித் தேடுகின்றார்கள். அவர்களுக்கு காட்சி கொடுக்காமல் நீ உள்ளாய்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com