97. மந்திர மறையவை - பாடல் 10

உண்மையான சொற்களை
97. மந்திர மறையவை - பாடல் 10


பாடல் 10:

    போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
    நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
    வேதியர் பரவு வெண்காடு மேவிய
    ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே

விளக்கம்:

போதியர்=போதி மரத்தை வழிபடும் புத்தர்கள்; பிண்டியர்கள்=அசோக மரத்தினை வழிபடும் சமணர்கள்; பெருமானின் தன்மைகளை பெருமைகளை குறிப்பிடும் உண்மையான சொற்களை சொல்லாமல் இருக்கும் புத்தர்கள் மற்றும் சமணர்கள் மீது இரக்கம் கொண்டு, நல்வாழ்க்கை அமையாதவர்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுவதாக உரையாசிரியர்கள் விளக்கம் கூறுகின்றனர். பொருத்தம்=பொருத்தமான நல்வாழ்கை;  

பொழிப்புரை:

போதி மரத்தினை வழிபடும் புத்தர்களும் அசோக மரத்தினை வழிபடும் சமணர்ளும், பொருத்தமான நல்வாழ்க்கை இல்லாதவராக, பெருமானின் இயல்புகள் பெருமைகளை உணர்த்தும் உண்மையான சொற்களை பேசுவதையும்
நினைப்பதையும் செய்யாமல் இருக்கின்றனர். வேதம் ஓதிய அந்தணர்கள் புகழ்ந்து பாடி துதிக்க திருவெண்காடு தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை, அனைவர்க்கும் ஆதியாக விளங்கும் பெருமானை தொழும் அடியார்களுக்கு துன்பம்இல்லையாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com