சிங்கப்பூரில் நேர மேலாண்மைப் பயிலரங்கு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) சென்ற ஞாயிற்றுக்கிழமை
சிங்கப்பூரில் நேர மேலாண்மைப் பயிலரங்கு


சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) சென்ற ஞாயிற்றுக்கிழமை, 11-09-2016 அன்று மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்யும் நோக்கில், நேர மேலாண்மை (TIME MANAGEMENT) பற்றிய இலவசப் பயிலரங்கு ஒன்றை சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடத்தியது.

தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர்நிலை நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் சுமார் 100 பேர் இப்பயிலரங்கில் கலந்துகொண்டனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சில பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

30 ஆண்டுகள் கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற கணிதப் பேராசிரியர் ஹாஜி பி. எம். ஏ. அமானுல்லா இப்பயிலரங்கை நடத்தினார். பள்ளிப் பாடங்களை பயிலும் பொழுதும், தேர்வு காலங்களிலும், நேரத்தை எவ்வாறு முறையாக நிர்வகித்து திறம்படச் செயல்பட வேண்டும் என்று நேர மேலாண்மை தொடர்புடைய பத்து யுக்திகள் இப்பயிலரங்கில் விளக்கப்பட்டன.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் கே. தனலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். “இன்றைய மாணவர்கள்தான் நாளைய சிங்கப்பூரை உருவாக்கக் கூடியவர்கள்; இளையர்கள் அனைவரும், கல்வியில் அதிக கவனம் செலுத்தி, கால நேரத்தை சரியாக நிர்வகித்து முன்னேற வேண்டும்” என்று அவரது சிறப்புரையில் குறிப்பிட்டார். “ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான இலவசப் பயிலரங்கு தொடர்ந்து நடத்தப்படும்” என்று அறிவித்தார் சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் டாக்டர் ஹாஜி முஹிய்யத்தீன் அப்துல் காதர்.

மாணவர்கள் தேர்வுக்காகத் தயார் செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில், இப்பயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com