தைவான் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் பள்ளி திறப்பு உட்பட முப்பெரும் விழா

தைவான் தமிழ் சங்கத்தின் தமிழ் பள்ளி திறப்பு விழா மற்றும் தமிழ் சங்கத்தின் தலைவர் முனைவர் யு ஷி அவர்களுக்கு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தைவான் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் பள்ளி திறப்பு உட்பட முப்பெரும் விழா

தைவான் தமிழ் சங்கத்தின் தமிழ் பள்ளி திறப்பு விழா மற்றும் தமிழ் சங்கத்தின் தலைவர் முனைவர் யு ஷி அவர்களுக்கு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

“தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதிதாசனின் கூற்றுக்கு இணங்க, சீன மண்ணில் போங்குதமிழோசைதனை பரவ செய்த தைவான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் யூசி (Dr. Yu Hsi) அவர்களின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. உலகப்பொதுமறை திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் ஔவையாரின் ஆத்திசூடி நூல்களை சீன மொழிக்கு மொழிபெயர்த்து அவர் தமிழுக்காற்றிய தொண்டிற்காக 28-7- 2017 ஆம் நாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (Honorary Doctorate) வழங்கி கெளரவப்படுத்தியது. தன் தமிழ்த் தொண்டுக்காக தமிழக அரசால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற தலைவர் யூசி அவர்களுக்கு தைவான் தமிழ்ச் சங்கம் பெருமைபடுத்தும் விதமாக தலைவர் யூசி அவர்களுக்கு “பாராட்டு விழா” மற்றும் எழுத்துவடிவில் மட்டுமே எண்ணி இருந்த இந்த தொலைநோக்கு திட்டமான தைவான் தமிழ் சங்கத்தின் மைல் கல் சாதனையாக கருதப்படும், “தைவானில் தமிழ் பள்ளி” யின் துவக்க விழாவும் ஒருசேர 23-09- 2017, சனிக்கிழமை தைவான் தேசிய பல்கலை கழகத்தில் செவ்வனே நடைபெற்றது.

சித்தார்த் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழா, தைவான் தமிழ் சங்க செயலாளர் முனைவர் ஆகு பிரசண்ணன் அவர்களின் வரவேற்புரை வழங்கிய பின் பரதநாட்டியத்துடன் துவங்கியது. இந்திய தூதரக முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்களும், இந்திய தூதரக இணை இயக்குனர் ரிஷிகேஷ் சுவாமிநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பள்ளி திறப்பு விழாவினை சிறப்பித்தார். சீனராக இருந்த போதும் தமிழ் மேல் கொண்ட பற்றுதல் காரணமாக தமிழ் இலக்கியங்களை சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் புலவர் யூ சி அவர்களுக்கு தைவான் தமிழ் சங்கம் சார்பாக பாராட்டுப்பத்திரம் வழங்கி கொளரவித்தது. 
 

மேலும் ‘விழுதுகள்’ என்ற தைவான் தமிழ் பள்ளியினை தைவான் தமிழ் சங்க தலைவரும், இந்திய தூதரக முதன்மை இயக்குனரும் இணைந்து திறந்துவைத்தனர். தைவான் தமிழ்ப் பள்ளி பற்றிய சிறப்புகளையும், செயல்பாடுகள் பற்றியும் மற்றும் பள்ளி உருவான விதம் பற்றியும் தைவான் தமிழ் சங்கத் துணை தலைவர் இரமேஷ் பரமசிவம் அவர்கள் எடுத்துரைக்க, தைவான் தமிழ் சங்கத்தின் எதிர்கால திட்டங்களை மற்றுமொரு துணை தலைவர் முனைவர் சங்கர ராமன் அவர்களால் விளக்க பட்டது. முனைவர் யூ சி அவர்களின் சாதனைகளையும், தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள் பற்றியும் தைவான் தமிழ் சங்க துணை செயலாளர் திரு பொன்முகுந்தன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

மேலும் மற்றுமொரு புது முயற்சியாக, தைவானில் முனைவர் பட்டம் பயில தமிழகத்தில் இருந்து வந்த அனைத்து தமிழ்ஆராய்ச்சி மாணவர்களையும் வரவேற்று தைவான் தமிழ் சங்க பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் இந்திய தூதரக முதன்மை இயக்குனர் திருமிகு ஸ்ரீதரன் அவர்களும் சிறப்புரையாற்றினார். தமிழன் மற்றும் தமிழ் என்று பெருமை சொல்லி பழம்பெருமை சொல்லுவதை விடுத்து, மாற்று மொழியில் இருக்கும் நல்ல இலக்கியத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யவேண்டும் அதுவே நமது தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியாக துணை பொருளாளர் முனைவர் பூபதி சுப்பிரமணி நன்றி உரை கூற தேசிய கீதத்துடன்  விழா இனிதே நிறைவுற்றது.

இந்த மூன்று பெரும் விழாவினில் தைவானின் பல்வேறு நகரங்களில் இருந்தும் நூற்றுகணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு, தைவான் தமிழ்ச்சங்க தலைவரின் தமிழ்ச் சேவைதனை பாராட்டி, தமிழ் பள்ளியின் துவக்க விழாவினில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com