துளிகள்...

லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவுக்காக காத்திருப்பது என

*லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவுக்காக காத்திருப்பது என தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
*ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நேபாளம் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் ரன் அடிப்படையில் 3-ஆவது பெரிய வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. நேபாள அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
*ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (ஏஎப்சி) மூத்த துணைத் தலைவராக இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
*2016-ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஎஃப்சி) உறுப்பினர் சங்க கால்பந்து மேம்பாட்டு விருது இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com