நான் எதிர்கொண்டவர்களில் மெக்ராத்தே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்

நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத்தே சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்தார்.
நான் எதிர்கொண்டவர்களில் மெக்ராத்தே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்

நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத்தே சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்தார்.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ராகுல் திராவிட் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: எனது தலைமுறையில் ஆஸ்திரேலியாவே தலைசிறந்த அணி. நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் மெக்ராத்தே தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவர் சாதுர்யமான பெüலர்.
எனது அறிவுக்கு எட்டியவரையில் மெக்ராத் அளவுக்கு வேறு யாராலும் ஆப் ஸ்டெம்பை குறி வைத்து துல்லியமாக பந்துவீச முடியாது. அவர் மிகுந்த போராட்டக் குணம் கொண்டவர். அவர் நாம் ரன் எடுப்பதற்கான வாய்ப்பை எப்போதுமே வழங்கமாட்டார். காலையிலோ அல்லது மதியத்துக்குப் பிறகோ, எப்போது பந்துவீசினாலும், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் துல்லியமாக பந்துவீசுவார் மெக்ராத்.
சிலருடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது இந்த ஓவரில் எப்படி ரன் எடுப்பது, உதிரிகள் மூலம் ஏதாவது ரன் கிடைக்குமா என சிந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட பந்துவீச்சாளர்களில் மெக்ராத்தும் ஒருவர். அவர் எப்போதுமே மிகத்துல்லியமாகவும், கட்டுக்கோப்பாகவும் பந்துவீசக் கூடியவர். அவருடைய பந்துவீச்சில் நல்ல வேகம் இருக்கும். அவர் வீசும் பந்துகள் நன்றாக எகிறும் என்றார்.
164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் திராவிட் 13,288 ரன்கள் குவித்துள்ளார். அவர் விளையாடிய காலங்களில் ஆஸ்திரேலியா வலுவான பெüலர்களை கொண்டிருந்தாலும், அந்த அணிக்கு எதிராகவே அதிக ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மெக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 250 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 381 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com