இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்: பிரதமர் மோடிக்கு எஸ்சிஏ அழைப்பு

குஜராத் மாநிலம் செüராஷ்டிரத்தின் ராஜ்கோட் மைதானத்தில் முதன்முறையாக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்: பிரதமர் மோடிக்கு எஸ்சிஏ அழைப்பு

குஜராத் மாநிலம் செüராஷ்டிரத்தின் ராஜ்கோட் மைதானத்தில் முதன்முறையாக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு செளராஷ்டிர கிரிக்கெட் சங்கம் (எஸ்சிஏ) அழைப்பு விடுத்துள்ளது.
 இந்தியா - இங்கிலாந்து இடையேயான அந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நவம்பர் 9 முதல் 13-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது.
 இதுகுறித்து, செüராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு ஷா கூறியதாவது:
 ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இப்பகுதி கிரிக்கெட் ரசிகர்களுக்கான பெருமையாகும். அத்தகைய போட்டிக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
 பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்துக்கான அடிக்கல் நாட்டினார். கட்டி முடிக்கப்பட்ட இந்த மைதானத்தை கடந்த 2003 ஜனவரி 5-ஆம் தேதி அவரே திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.
 பிரதமர் மோடி இந்தப் போட்டிக்கு வருகை தருவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்போட்டிக்கு, மாநில முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று ஹிமான்ஷு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com