தலையில் பந்து தாக்கியதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் வீரரின் தலையில் பந்து தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தலையில் பந்து தாக்கியதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்தின் உள்ளூர் கௌன்டி ஆட்டம் ஒன்றில் நாட்டிங்ஹாம்ஷயர், பர்மிங்கம் இடையிலான டி20 ஆட்டம் நடைபெற்றது.

அப்போது, பர்மிங்காம் பேட்ஸ்மேன் சாம் ஹய்ன் அடித்த பந்து நாட்டிங்ஹாம்ஷயர் பந்துவீச்சாளர் லூக் பிளெட்சர் தலையில் பலமாகத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த பிளெட்சர், மைதானத்திலேயே நிலைகுலைந்தார்.

இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு நாட்டிங்கம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், பெரியளவில் காயம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், சக அணி வீரரான ஜேக் பால், மருத்துவமனை சென்று பிளெட்சரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், ஆக்ஸிஜன் மாஸ்குடன் இருக்கும் பிளெட்சர், நலமாக இருப்பது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதுகுறித்து நாட்டிங் அவுட்லாஸ் அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூரிஸ் கூறியதாவது:

பிளெட்சருக்கு பலமான காயம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் அனைவரும் அதிர்ந்து விட்டோம். இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் முன்னேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று அல்லது நாளை வீடு திரும்பவுள்ளார். விரைவில் களம் திரும்புவார் என நம்புவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com