சவாலை ஏற்றுக்கொள்கிறேன் விராட் - ட்விட்டரில் மோடி பதில்; விரைவில் விடியோ 

கோலி விடுத்த உடற்தகுதி சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
சவாலை ஏற்றுக்கொள்கிறேன் விராட் - ட்விட்டரில் மோடி பதில்; விரைவில் விடியோ 

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்களின் உடற்தகுதி மந்திரத்தை செயல்படுத்தி அதனை விடியோ மூலம் சமூகவலைதளங்களில் பதிவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து, அவர் உடற்தகுதி சவாலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்மிண்டன் விராங்கனை சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரை பங்கேற்க செவ்வாய்கிழமை பரிந்துரை செய்தார். 

அதையேற்ற கோலி தான் உடற்பயிற்சி செய்யும் விடியோவினை காட்சிப்படுத்தி, புதன்கிழமை ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் மனைவி அனுஷ்கா ஆகியோருக்கு உடற்தகுதி சவாலை விடுப்பதாகவும் கோலி குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, விராட்! உடற்தகுதி சவாலுக்கான விடியோவை நான் விரைவில் பகிர்கிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com