ஆசிய விளையாட்டுப் போட்டி: அரையிறுதியில் சாக்‌ஷி மாலிக் தோல்வி!

62 கிலோ மல்யுத்தப் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் எதிர்பாராதவிதமாக அரையிறுதியில் தோற்றார்...
ஆசிய விளையாட்டுப் போட்டி: அரையிறுதியில் சாக்‌ஷி மாலிக் தோல்வி!

18-வது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற மகளிருக்கான 62 கிலோ மல்யுத்தப் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் எதிர்பாராதவிதமாக அரையிறுதியில் தோற்றார்.

கிர்கிஸ்தானைச் சேர்ந்த டைனைபெப்கோவாவுடனான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார் சாக்‌ஷி மாலிக். இறுதிக்கட்டத்தில் 7-6 என முன்னிலை வகித்தார் சாக்‌ஷி மாலிக். எனினும் அதன்பிறகு தடுப்பாட்டம் ஆடியதால் கிர்கிஸ்தான் வீராங்கனை சாக்‌ஷியை வளையத்தை விட்டு வெளியே தள்ளி இரு புள்ளிகள் பெற்று அபாரமான வெற்றியை அடைந்தார். 

எனினும் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத், உஸ்பெகிஸ்தான் வீராங்கனைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

இதுவரையிலான பதக்கப் பட்டியலில் இந்திய அணி  1 தங்கம் 1 வெள்ளி 1 வெண்கலத்துடன் 10-ம் இடத்தில் உள்ளது. சீனா 11 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com