ஆசியப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை...
ஆசியப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 25 மீ. பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரஹி சர்னோபத் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4-வது தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது இந்தியா.

இறுதிச்சுற்றில், ஒருகட்டத்தில் ரஹி சர்னோபத்தும் தாய்லாந்தின் யங்பைபூனும் சமநிலையில் இருந்ததால் ஷூட் ஆஃப் முறையில் வெற்றியாளருக்கான போட்டி நடைபெற்றது. இதில் ரஹி சர்னோபத் வெற்றி கண்டு தங்கம் வென்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனு பாஸ்கர் பதக்கம் வெல்லமுடியாமல் 6-ம் இடம் பெற்று தோல்வியடைந்தார். 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரஹி சர்னோபத். 

4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com