நேற்றைய உலகக்கோப்பை ஆட்டம் இவர்களுக்கு மட்டும் பிரச்னையாக இருந்தது ஏன்?

இதுதான் கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் சிக்கலை உண்டாகியிருக்கிறது... 
நேற்றைய உலகக்கோப்பை ஆட்டம் இவர்களுக்கு மட்டும் பிரச்னையாக இருந்தது ஏன்?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரஷியாவும் சவுதி அரேபியாவும் மோதின.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ரஷியாவுக்காக யுரி கஸ்னிகி, டெனிஸ் செரிஷேவ் (2), அர்டெம் டையுபா, கோலோவின் ஆகியோர் கோலடித்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளின் உடைகளின் வண்ணங்கள் என்ன என்று ஒரு நொடி எண்ணிப்பாருங்கள்? ரஷிய அணியினர் சிவப்பு உடையணிந்தும் சவுதி அரேபியா அணியினர் பச்சை நிற உடையணிந்தும் விளையாடினார்கள் இல்லையா! இதுதான் கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் சிக்கலை உண்டாகியிருக்கிறது. 

நிறக்குருடுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த ஆட்டத்தைக் காண்பதில் பிரச்னை ஏற்படுவதாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதினார்கள். 

நிறக்குருடுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்தி இருக்காது. எல்லாமே ஒரே நிறத்தில்தான் தெரியும். இந்தப் பாதிப்பினால், சாதாரணமாகப் பார்வையிலோ, பார்க்கிற காட்சிகளிலோ எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், காண்கிற காட்சிகளின் நிறங்களில்தான் பிரச்னை ஏற்படும். 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ரஷிய அணியினர் சிவப்பு உடையிலும் சவுதி அரேபிய அணியினர் பச்சை உடையிலும் விளையாடியதுதான் நிறக்குருடு பிரச்னை உள்ளவர்களுக்குச் சிக்கலை வரவழைத்துள்ளது. அதுகுறித்து சமூகவலைத்தளங்களில் வெளியான சில பதிவுகள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com