ஃபிஃபா 2018: அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆட்டம் டிரா

ஃபெனல்டி வாய்ப்பை முன்னணி வீரர் மெஸ்ஸி கோட்டை விட்ட காரணத்தால் அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ஃபிஃபா 2018: அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆட்டம் டிரா

'உலகக் கோப்பை கால்பந்து 2018' அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆரம்பம் முதலே மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா முன்னணி வீரர் மெஸ்ஸி, பல கோல் வாய்ப்புகளை தவற விட்டார்.

போட்டி தொடங்கிய 17-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் முதல் கோல் வாய்ப்பு ஐஸ்லாந்து கோல் கீப்பரால் துல்லியமாக முறியடிக்கப்பட்டது. ஆனால் 19-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் சேர்கோ ஆகிரோ முதல் கோலை அடித்தார்.

மீண்டும் 21-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் மற்றொரு கோல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. அதேநேரத்தில் 23-ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை ஐஸ்லாந்து வீரர் ஆல்ஃப்ரெட் ஃபின்போகன்ஸன் சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில், 64-ஆவது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸியின் கோல் முயற்சி தகர்க்கப்பட்டது. இறுதியாக 95-ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனல்டி வாய்ப்பையும் மெஸ்ஸி கோட்டை விட்டார்.

துரிதமாக செயல்பட்ட ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹேன்னஸ் ஹால்டர்ஸன், அபாரமாக செயல்பட்டு மெஸ்ஸியின் கோல் முயற்சிகளை துல்லியமாக முறியடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி டிராவில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com