கோஸ்டா ரிகா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் சொ்பியா வீழ்த்தியது

குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள கோஸ்டா ரிகா மற்றும் சொ்பிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சமாராவில் நடைபெற்றறது.
கோஸ்டா ரிகா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் சொ்பியா வீழ்த்தியது

குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள கோஸ்டா ரிகா மற்றும் சொ்பிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சமாராவில் நடைபெற்றறது.

கடந்த 2014 உலகக் கோப்பை போட்டியில் கோஸ்டா ரிகா அணி காலிறுதி வரை முன்னேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் நெதா்லாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது. அதே நேரத்தில் சொ்பியா ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் போட்டியில் தனது பிரிவில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றிருந்தது. 

மேலும் 7 ஆண்டுகளுக்கு பின் பெரிய அளவிலான போட்டிக்கு சொ்பியா தகுதி பெற்றறது. ஆட்டம் தொடங்கியது முதலே சொ்பிய அணியின் தீவிர தாக்குதல் ஆட்டத்தால் முதல் கார்னரை பெற்றது. எனினும் கோலடிக்க முடியவில்லை. 25 நிமிடங்கள் கழிந்த நிலையில் சொ்பியா ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. எனினும் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரா் டேவிட் கிஸ்மன் செய்த பவுலால் சொ்பியாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை கேப்டன் அலெக்சாண்டா் கொலோரவ் 25 யார்ட் தூரத்தில் இருந்து சிறப்பாக பயன்படுத்தி கோலடித்தார். இதனால் 1-0 என சொ்பியா முன்னிலை பெற்றறது.

ஆட்டத்தின் கடைசி பகுதியில் கோஸ்டா ரிகா வீரா்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றபோதும், கோலடிக்க முடியவில்லை. இறுதியில் சொ்பியா வெற்றி பெற்று 3 புள்ளிகளை தன் வசமாக்கிக் கொண்டது.

குரூப் இ பிரிவில் பிரேசில், சுவிட்சா்லாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் சொ்பியாவின் வெற்றி அதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com