பழிதீர்த்தது ஜப்பான்

கடந்த 2014-ஆம் உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு பதிலடியாக கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஜப்பான் பழிதீர்த்தது.
பழிதீர்த்தது ஜப்பான்

கடந்த 2014-ஆம் உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு பதிலடியாக கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஜப்பான் பழிதீர்த்தது.
குரூப் ஹெச் பிரிவில் உள்ள ஜப்பான்-கொலம்பியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை மாலை சரன்ஸ்க் நகரில் நடைபெற்றது. 
6-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் கொலம்பிய அணி கடந்த 2014-ம் ஆண்டு போட்டியில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்ஸின் சிறப்பான ஆட்டத்தால் காலிறுதி வரை முன்னேறியது. 4 முறை ஆசியக் கோப்பை கால்பந்து பட்டத்தை வென்ற ஜப்பான் அணியும் 6-வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் கடந்த 2014 போட்டியில் ஜப்பான் 1-4 என கொலம்பியாவிடம் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடினர்.

10 வீரர்களுடன் கொலம்பியா
ஆட்டம் தொடங்கி 4-வது நிமிடத்தில் கோல் பகுதியில் கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் கையில் பட்டு பந்து பவுல் ஆனது. இதையடுத்து கார்லோஸுக்கு நடுவர் சிகப்பு அட்டை காண்பித்ததால் வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் மட்டுமே கொலம்பியா ஆட முடிந்தது. இதையடுத்து ஜப்பான் அணிக்கு தரப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஷின்ஜி ககாவா அற்புதமாக கோலடித்தார். இதன் மூலம் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.
இதற்கிடையே 39-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஜூவான் குயிண்டெரோ அற்புதமாக கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவின் போது 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணி வீரர்களும் மீண்டும் முன்னிலை பெற தீவிரமாக போராடினர்.73-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் மூலம் கீய்ஸுகி ஹோண்டா அடித்த பந்தை யுயா ஓஸாகா தலையால் முட்டி கோலாக்கினார். இதன் மூலம் ஜப்பான் 2-1 என முன்னிலை பெற்றது. 

சிவப்பு அட்டையால் தோல்வி

ஆட்டம் முடியும் வரை கோலடிக்க கொலம்பிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 
இது அந்த அணி ஐரோப்பாவில் பெற்ற முதல் வெற்றியாகும். அதே நேரத்தில் தென் அமெரிக்க அணிக்கு எதிரான முதலாவது வெற்றியும் ஆகும். கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் பெற்ற சிவப்பு அட்டை அந்த அணி தோல்விக்கு காரணமாகி விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com