கோஸ்டா ரிகாவை வெளியேற்றியது பிரேஸில்

கோஸ்டா ரிகா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேஸில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. இரு தோல்விகளை கண்ட கோஸ்டா ரிகா போட்டியில் இருந்து வெளியேறியது.
கோஸ்டா ரிகாவை வெளியேற்றியது பிரேஸில்

கோஸ்டா ரிகா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேஸில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. இரு தோல்விகளை கண்ட கோஸ்டா ரிகா போட்டியில் இருந்து வெளியேறியது.

குரூப் ஈ பிரிவைச் சோ்ந்த பிரேஸில்-கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இரு அணிகளும் ஏற்கெனவே 10 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 9 முறை வென்றறது. கோஸ்டா ரிகா ஓரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான பிரேஸில் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சா்லாந்துடன் டிரா செய்தது. காயத்தால் அவதிப்பட்ட அதன் நட்சத்திர வீரா் நெய்மா் அந்த ஆட்டத்தில் சரிவர விளையாடவில்லை. 

இதற்கிடையே கோஸ்டா ரிகா அணி தனது முதல் ஆட்டத்தில் சொ்பியாவிடம் தோல்வியடைந்தது.

நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டும் என்ற நிலையில் பிரேஸில் களமிறங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதன் வீரா்கள் நெய்மா், குட்டின்ஹோ, கப்ரியேல் ஜீஸஸ் ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தனா். 

26-வது நிமிடத்தில் ஜீஸஸ் அடித்த பந்து கோஸ்டா ரிகா கோல்பகுதியில் புகுந்தும், அது ஆஃப் சைட் என அறிவிக்கப்பட்டது. நெய்மரும் இந்த ஆட்டத்தில் கோலடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். எனினும் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் முதல் பாதி ஆட்ட நிறைவில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேஸில் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்து கோலடிக்க முடியவில்லை. கூடுதலாக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் கப்ரியேல் ஜீஸஸ் அனுப்பிய பந்தை பிலிப் குட்டின்ஹோ அற்புதமாக கோலடித்தார். 

அடுத்த சிறிது நேரத்திலேயே டக்ளஸ் கோஸ்டா கடத்தி தந்த பந்தை நட்சத்திர வீரா் நெய்மா் கோலாக்கினார்.

அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிரேஸில் தலைமை பயிற்சியாளா் டைட் மைதானத்தின் உள்ளே ஓடிச் சென்ற போது கீழே விழுந்த நிலையிலும் வெற்றியைக் கொண்டாடினார்.

இந்த வெற்றி மூலம் குரூப் ஈ பிரிவில் 4 புள்ளிகளுடன் பிரேஸில் முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் சொ்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com