உலகக் கோப்பை: நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற அணிகளும் வெளியேறிய அணிகளும்!

நேற்று வரையிலான (ஜூன் 22) ஆட்டங்களின் முடிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நான்கு அணிகளே தகுதி பெற்றுள்ளன...
உலகக் கோப்பை: நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற அணிகளும் வெளியேறிய அணிகளும்!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்று வரையிலான (ஜூன் 22) ஆட்டங்களின் முடிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நான்கு அணிகளே தகுதி பெற்றுள்ளன. அதேசமயம் 5 அணிகள் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன. அந்த அணிகள் கடைசி ஆட்டத்தில் வென்றாலும் நாக் அவுட்டுக்குத் தகுதி பெறமுடியாது. குரூப் ஏ முதல் குரூப் ஈ வரையிலான பிரிவுகள் அனைத்து அணிகளும் தலா இரு ஆட்டங்கள் ஆடியுள்ளன. ஆனால், குரூப் எஃப், குரூப் ஜி, குரூப் ஹெச் ஆகிய மூன்று பிரிவுகளிலும் அனைத்து அணிகளும் இதுவரை ஓர் ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளன. 

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்

ரஷியா
உருகுவே
பிரான்ஸ்
குரோஷியா

வெளியேறிய அணிகள்

எகிப்து
சவுதி அரேபியா
மொராக்கோ
பெரு
கோஸ்டா ரிகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com