கேப்டன் ஹாரி கேன் ஹாட்ரிக்: பனாமாவுக்கு எதிராக இங்கிலாந்து கோல் மழை

பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6-1 கோல்மழை பொழிந்தது. குரூப் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து- பனாமா அணிகள் மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நோவாகிராடில் நடைபெற்றது.
கேப்டன் ஹாரி கேன் ஹாட்ரிக்: பனாமாவுக்கு எதிராக இங்கிலாந்து கோல் மழை

பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6-1 கோல்மழை பொழிந்தது. குரூப் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து- பனாமா அணிகள் மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நோவாகிராடில் நடைபெற்றது.

8-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டிரிப்லா் அனுப்பிய பந்தை ஜான் ஸ்டோன்ஸ் அற்புதமாக கோலாக்கினார். 22-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பின் மூலம் கேப்டன் ஹாரி கேன் கோலடித்தார். 36-வது நிமிடத்தில் ஜெஸ்ஸி லின்கார்டும், 40-வது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸும் கோலடித்தனா்.

45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலை அடித்தார் கேப்டன் ஹாரி. இதன் மூலம் ஆட்டத்தின் முதல் பாதி நிறைவில் இங்கிலாந்து 5-0 என முன்னிலை பெற்றிருந்தது. முதல் பாதியில் 4 கோல்களுக்கு மேல் அடிப்பது இங்கிலாந்துக்கு இதுவே முதன்முறையாகும்.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் லாப்டஸ் சீக் கடத்தி அனுப்பி பந்தை அற்புதமாக கோலாக்கினார் கேப்டன் ஹாரி கேன். இதன் மூலம் ஹாரி கேன் ஹாட்ரிக் கோலடித்தார். 

பனாமாவுக்கு ஆறுதலாக 78-வது நிமிடத்தில் அந்த அணியின் அவில்லா அனுப்பிய பந்தை பெலிப் பலோய் சிறறப்பாக கோலடித்தார். இறுதியில் 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com