உலகக் கோப்பை கால்பந்து 2018: மைதானங்கள் ஒரு பார்வை

ஷியாவில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் 65 ஆட்டங்கள் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 
உலகக் கோப்பை கால்பந்து 2018: மைதானங்கள் ஒரு பார்வை

லூசினிக்கி மைதானம் (மாஸ்கோ)


ரஷியாவில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் 65 ஆட்டங்கள் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

இதற்காக அமைக்கப்பட்ட பெரிய மைதானம் மாஸ்கோவில் உள்ள லூசினிக்கி மைதானம் ஆகும். சிறிய மைதானம் காலின்கிராட் நகர மைதானம் ஆகும்.
தொடக்க, இறுதி ஆட்டங்கள் நடக்க உள்ள லூசினிக்கி விளையாட்டரங்கம் (மாஸ்கோ)-

மொத்த பார்வையாளர்கள்-81000, இந்த விûளாட்டரங்கம் கடந்த 1956-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1980-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன. கடந்த 1982-இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஒன்றில் ரசிகர்கள் அவசரமாக வெளியேற முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் 65 பேர் உயிரிழந்தனர்.
1996-இல் மேற்கூரை அமைக்கப்பட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டது. 1999, 2008-இல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் தொடக்க, இறுதிச் சுற்று ஆட்டம், 3 முதல் சுற்று ஆட்டங்கள், அரையிறுதி ஆட்டம் போன்றவையும் லூசினிக்கி மைதானத்தில் நடக்கின்றன.

சிறிய மைதானம் காலின் கிராட்


காலின்கிராட் நகரில் அமைந்துள்ள அரேனா பால்டிக்கா எனப்படும் இந்த மைதானம் உலகக் கோப்பையை முன்னிட்டு கடந்த 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நிதிச் சிக்கல் உள்பட பல்வேறு காரணங்களால் இந்த மைதானம் கட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 
இதில் மொத்தம் 35000 பார்வையாளர்கள் அமர முடியும். உலகக் கோப்பையில் ஆட்டங்கள் நடைபெறுவதில் இது மிகச் சிறிய மைதானமாகும். காலின் கிராட் மைதானத்தில் 4 லீக் சுற்று துவக்க ஆட்டங்கள் நடக்கின்றன. எஃப் சி பால்டிகா அணி இதை தாயகமாகக் கொண்டு விளையாடி வருகிறது. 12 மைதானங்களில் இதுதான் சிறிய மைதானமாகும்.

1938 மூன்றாவது உலகக் கோப்பை சாம்பியன் இத்தாலி

1938-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது.
1936-இல் நடந்த பிஃபா கூட்டத்தில் பிரான்ஸில் உலக கோப்பை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஐரோப்பாவில் போட்டி நடத்த அனுமதி தரப்பட்டதால், தென் அமெரிக்க நாடுகள் அதிருப்தி அடைந்தன. உருகுவே, ஆர்ஜென்டீனா போன்றவை இதில் பங்கேற்கவில்லை.

நடப்புச் சாம்பியன் என இத்தாலியும், போட்டியை நடத்தும் நாடு என பிரான்ஸும் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 14 இடங்களில் 11 இடங்கள் ஐரோப்பாவுக்கும், 2 இடங்கள் அமெரிக்காவுக்கும், 1 இடம் ஆசியாவுக்கும் ஒதுக்கப்பட்டது. 1938 ஜூன் 4 முதல் 19-ஆம் தேதி வரை (16 நாள்கள்) போட்டி 10 நகரங்களில் நடைபெற்றது. 

அரையிறுதியில் ஸ்வீடனை 5-1 என ஹங்கேரியும், பிரேசிலை 2-1 என இத்தாலியும் வென்று இறுதிக்கு தகுதி பெற்றன. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஹங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்று தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டாம் உலகப் போரால் பாதிப்பு: இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முடியவில்லை. அதன் பின்னர் 1950-இல் தான் நிலைமை சீரடைந்தது. எதிரி நாடுகளிடம் இருந்து கோப்பையை பாதுகாக்கும் வகையில் அப்போதைய பிஃபா துணைத் தலைவர் ஓட்டாரினோ காலணி பெட்டியில் மறைத்து வைத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com