அஸ்வின் 200!

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 200-ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்...
அஸ்வின் 200!

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 200-ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இது அவருடைய 37-ஆவது போட்டியாகும்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக ஹர்பஜன் சிங் 46 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தியதே இந்தியர் ஒருவரின் சாதனையாக இருந்தது. இதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 50, 100, 150-ஆவது விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் வரிசையிலும் அஸ்வினே முதலிடத்தில் உள்ளார்.

குறைவான டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள்

அஸ்வின்37
ஹர்பஜன் சிங்46
அனில் கும்ப்ளே47
சந்திரசேகர்48
கபில் தேவ்50
பிஷன் பேடி51
ஸ்ரீநாத்54
ஜாகீர் கான்63
இஷாந்த் சர்மா65

இதுதவிர சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட் (36 போட்டி) உள்ளார்.

200 விக்கெட் வீழ்த்தியது குறித்துப் பேசிய அஸ்வின், "200 விக்கெட் என்பது மிகச்சிறப்பான ஒன்றாகும். கேன் வில்லியம்சன் விக்கெட் மிக முக்கியமானதாகும். முதல் இன்னிங்ஸிலும் கேன் வில்லியம்சன் துல்லியமான ஒரு பந்தில்தான் ஆட்டமிழந்தார். வருங்காலத்தில் இதேபோன்று முக்கிய விக்கெட்டுகளை அதிகளவில் வீழ்த்துவேன் என நம்புகிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com