மொஹாலி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சாதனைத் துளிகள்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்தது. ரோஹித் ஷர்மா...
மொஹாலி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சாதனைத் துளிகள்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசினார். இதன்மூலம் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷ்ரமா 3-ஆவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். 

இந்திய அணியின் கேப்டன் இரட்டைச் சதம் அடிப்பது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக வீரேந்திர சேவாக் இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

இலங்கை அணியுடன் தனது 2-ஆவது இரட்டைச் சதத்தை ரோஹித் ஷர்மா விளாசினார்.

இந்திய அணிக்கு குறைந்த வயதில் களமிறங்கியவர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - 16 வயது 238 நாட்கள்
  • மனிந்தர் சிங் - 17 வயது 222 நாட்கள்
  • ஹர்பஜன் சிங் - 17 வயது 288 நாட்கள்
  • பார்திவ் படேல் - 17 வயது 301 நாட்கள்
  • எல்.ஆர்.ஷுக்லா - 17 வயது 320 நாட்கள்
  • சேத்தன் ஷர்மா - 17 வயது 338 நாட்கள்
  • வாஷிங்டன் சுந்தர் - 18 வயது 69 நாட்கள்

இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - 49 சதங்கள்
  • விராட் கோலி - 32 சதங்கள்
  • சௌரவ் கங்குலி - 22 சதங்கள்
  • ரோஹித் ஷர்மா - 16 சதங்கள்
  • வீரேந்திர சேவாக் - 15 சதங்கள்
  • யுவராஜ் சிங் - 14 சதங்கள்

இந்திய அணி முதல் இரண்டு விக்கெட்டுகளுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்:

  • 2009 - இலங்கை
  • 2010 - நியூஸிலாந்து
  • 2011 - தென் ஆப்பிரிக்கா
  • 2011 - மேற்கிந்தியத் தீவுகள்
  • 2012 - ஆஸ்திரேலியா
  • 2017 - இலங்கை

ஒரு வருடத்தில் அதிக முறை 300 ரன்களுக்கு மேல் அடித்த அணிகள்:

  • ஆஸ்திரேலியா - 11 (2007)
  • இந்தியா - 10 (2009)
  • இங்கிலாந்து - 10 (2015)
  • இங்கிலாந்து - 10 (2017)
  • இந்தியா - 10 (2017)


ஒருநாள் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சதமடித்த இந்தியர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - 9 சதங்கள் (1998)
  • சௌரவ் கங்குலி - 7 சதங்கள் (2000)
  • சச்சின் டெண்டுல்கர் - 6 சதங்கள் (1996)
  • ராகுல் டிராவிட் - 6 சதங்கள் (1999)
  • விராட் கோலி - 6 சதங்கள் (2017)
  • ரோஹித் ஷர்மா - 6 சதங்கள் (2017)


வேகமாக சதமடித்த இந்திய கேப்டன்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - முதல் போட்டி
  • கௌதம் கம்பீர் - 2-ஆவது போட்டி
  • விராட் கோலி - 2-ஆவது போட்டி
  • ரோஹித் ஷர்மா - 2-ஆவது போட்டி
  • அஜய் ஜடேஜா - 4-ஆவது போட்டி
  • முகமது அசாருதின் - 5-ஆவது போட்டி
  • சௌரவ் கங்குலி - 6-ஆவது போட்டி


ஒருநாள் போட்டிகளில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் விளாசிய கேப்டன்கள்:

  • வீரேந்திர சேவாக் - 219 ரன்கள் (2011-ல் மேற்கிந்தியத் தீவுகளுடன் இந்தூரில் நடந்த போட்டி)
  • ரோஹித் ஷர்மா - 208* ரன்கள் (2017-ல் இலங்கையுடன் மொஹாலியில் நடந்த போட்டி)
  • சனத் ஜெயசூரியா - 189 ரன்கள் (2000-ல் இந்தியாவுடன் ஷார்ஜாவில் நடந்த போட்டி)
  • சச்சின் டெண்டுல்கர் - 186* ரன்கல் (1999-ல் நியூஸிலாந்துடன் ஹைதராபாத்தில் நடந்த போட்டி)


ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் வழங்கிய இலங்கை பந்துவீச்சாளர்கள்:

  • நுவன் பிரதீப் - 106 ரன்கள் (2017-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டி)
  • முத்தையா முரளிதரன் - 99 ரன்கள் (2006-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி)
  • அஷந்த டி மெல் - 97 ரன்கள் (1987-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி)
  • லசித் மலிங்கா - 96 ரன்கள் (2012-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டி)


ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த பேட்ஸ்மேன்கள்:

  • ரோஹித் ஷர்மா - 264 ரன்கள்
  • மார்டின் கப்டில் - 237* ரன்கள்
  • வீரேந்திர சேவாக் - 219 ரன்கள்
  • கிறிஸ் கெயில் -  215 ரன்கள்
  • ரோஹித் ஷர்மா - 209 ரன்கள்
  • ரோஹித் ஷ்ரமா - 208* ரன்கள்
  • சச்சின் டெண்டுல்கர் - 200* ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com