3-ஆவது ஒருநாள் போட்டியில் சதம், சிக்ஸர்களுடன் ரோஹித் ஷர்மா புது சாதனை!

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதமடித்தார். இதன்மூலம் புதிய சாதனைப் படைத்தார்.
3-ஆவது ஒருநாள் போட்டியில் சதம், சிக்ஸர்களுடன் ரோஹித் ஷர்மா புது சாதனை!

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா சதமடித்தார். இதன்மூலம் புதிய சாதனையையும் படைத்தார்.

சாதனைத் துளிகள்

இப்போட்டியின் மூலம் ரோஹித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளில் தனது 35-ஆவது சதத்தை பதிவு செய்தார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது 15-ஆவது சதமாகும். 

நியூஸிலாந்துக்கு எதிராக ரோஹித் ஷர்மா, ஒருநாள் போட்டியில் குவித்த முதல் சதம் இதுதான்.

2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தார்.

இப்போட்டியில் இரண்டு சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 150 சிக்ஸர்களை விளாசியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்தியர்கள் பட்டியலில் 5-ஆவது இடத்தைப் பிடித்தார்.

தோனி 206, சச்சின் டெண்டுல்கர் 195, சௌரவ் கங்குலி 189, யுவராஜ் சிங் 153 ஆகியோர் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முறையே முதல் 5 இடங்களில் உள்ளனர்.

அதுபோல குறைந்த இன்னிங்ஸ்களில் 150 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வீரர்களின் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடித்தார். அவர் மொத்தம் 165 இன்னிங்ஸ்களில் இச்சாதனையைப் புரிந்தார்.

அஃப்ரிடி 160, டிவில்லியர்ஸ் 176, கிறிஸ் கேய்ன்ஸ் 189, தோனி மற்றும் மெக்கல்லம் 192, கிறிஸ் கெயில் 198 ஆகியோர் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 சிக்ஸர்கள் விளாசியவர்களின் பட்டியலில் முறையே முதல் 5 இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com