கோலி, டிவில்லியர்ஸை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள்!

ஐபிஎல் போட்டியில் விராட் கோலியும் டிவில்லியர்ஸும் மூன்று முறை அடுத்தடுத்த பந்துகளில் (ஒரே பந்துவீச்சாளரிடம்) ஆட்டமிழந்துள்ளார்கள்..
கோலி, டிவில்லியர்ஸை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள்!

பெங்களூர் ஐபிஎல் அணிக்கு எதிரான  ஆட்டம் என்றால் எதிரணிக்குக் கொஞ்சம் கிலியாக இருக்கும். 

ஒரே அணியில் கோலியும் டிவில்லியர்ஸும் இருந்தால் எந்த எதிரணிதான் அச்சப்படாது? எனினும் நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் இளம் வீரர் ரானா.

இது முதல்முறையல்ல.  ஐபிஎல் போட்டியில் விராட் கோலியும் டிவில்லியர்ஸும் மூன்று முறை அடுத்தடுத்த பந்துகளில் (ஒரே பந்துவீச்சாளரிடம்) ஆட்டமிழந்துள்ளார்கள். அடுத்தடுத்த பந்துகளில் இல்லாவிட்டாலும் ஒரே ஓவரில் இருவரையும் வீழ்த்திய பந்துவீச்சாளர்களும் உண்டு.

நேற்றைய ஐபிஎல் போட்டியின் 3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை அவர் பெற்றார். இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸை 44 ரன்களிலும் கோலியை 31 ரன்களிலும் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார் 24 வயது நிதிஷ் ரானா.

2012-ல் காலிஸும் 2016-ல் பெரேராவும் நேற்று ராணாவும் தலா ஒரு முறை அடுத்தடுத்த பந்துகளில் கோலி, டிவில்லியர்ஸை வீழ்த்தியுள்ளார்கள்.

அதேசமயம் அடுத்தடுத்த பந்துகளில் இல்லாவிட்டாலும் ஒரே ஓவரில் இருவரையும் வீழ்த்திய பந்துவீச்சாளர்களும் உண்டு. அவர்களுடைய பட்டியல்:

காலிஸ், கொல்கத்தா - 2012
குல்கர்ணி, மும்பை - 2013
நெஹ்ரா, ராஞ்சி - 2015
பாண்டியா - மும்பை - 2016
பெரேரா - புணே - 2016
ரானா - கொல்கத்தா, 2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com