கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் பேட்டிங்

2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது தான் முதன்முறையாக அதன் சொந்த மைதானத்தில் களமிறங்குகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் பேட்டிங்

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி செவ்வாய்கிழமை மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா மொத்தம் 838 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 8 அரைசதங்கள் அடங்கும். மேலும் 2014 சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சதமடித்துள்ளார்.

இப்போட்டியில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட தோனிக்கு இன்னும் 8 ரன்கள் மட்டுமே தேவை. அப்போது ஐபிஎல் வரலாற்றில் சுரேஷ் ரெய்னாவுக்கு (3,703 ரன்கள்) அடுத்து 3 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைப்பார்.

அதுமட்டுமல்லாமல் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது தான் முதன்முறையாக அதன் சொந்த மைதானத்தில் களமிறங்குகிறது. சுமார் 1,000 நாட்களுக்குப் பின்னர் ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையில் சேப்பாக்கத்தில் விளையாடுகிறது. 

இரு அணி வீரர்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், மகேந்திர சிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்கூர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

சுனில் நரேன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், வினய் குமார், பியூஷ் சாவ்லா, டாம் குர்ரன், குல்தீப் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com