இந்த வருட ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து ஜெயித்து வரும் 'சென்னை'!

இந்த ஐந்து ஆட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை - 'சென்னை'-யின் வெற்றிகள்!
இந்த வருட ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து ஜெயித்து வரும் 'சென்னை'!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை நான்கு ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்று சென்னை - கொல்கத்தா அணிகளுக்கிடையே ஐபிஎல் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து ஆட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி த்ரில் வெற்றி கண்டது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்றது. பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது.

3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது.

நேற்று நடைபெற்ற இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணி
அபார வெற்றி பெற்றது. அதன் தொடக்க ஆட்டக்காரரர் ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 77 ரன்களை குவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன 5-வது ஐபிஎல் போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த ஐந்து ஆட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை - 'சென்னை'-யின் வெற்றிகள்!

1. முதல் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
2. 2-வது ஆட்டத்தில் சென்னை அணியை கேப்டனாகக் கொண்ட பஞ்சாப் அணி வென்றது.
3. 3-வது ஆட்டத்தில் இன்னொரு சென்னை வீரரான தினேஷ் கார்த்திக் தலைமையேற்றுள்ள கொல்கத்தா அணி வென்றது.
4. 4-வது ஆட்டத்தை வென்ற ஹைதரபாத் அணியின் உரிமையாளர், சென்னையைச் சேர்ந்தவர்! (கலாநிதி மாறன்)
5. இன்று நடைபெறவுள்ள சென்னை - கொல்கத்தா ஆட்டத்தில் யார் வென்றாலும் அந்தப் பெருமையும் சென்னைக்கே உரியது!

இப்படியொரு 'புள்ளிவிவரம்' சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

நாளை, ஜெய்பூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தானும் தில்லியும் மோதவுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் சென்னைக்கும் அவ்வளவாகத் தொடர்பு கிடையாது. தில்லி அணியில் விஜய் சங்கர் விளையாடிவருகிறார். அவ்வளவுதான். இதனால் சென்னை ரசிகர்களின் தற்பெருமைகள் தற்காலிகமாக முற்றுப்பெறுகின்றன என்றும் கூறலாம். எனினும் அதற்கடுத்த நாள் மும்பை - ஹைதரபாத் அணிகள் மோதுகின்றன. அதிலும் சென்னை ரசிகர்கள் பெருமிதம் கொள்வதற்கான காரணம் அமையலாம். 

இனிமேல் இப்படித்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com