அதிக சிக்ஸர்கள்: சாதனைக்கு மிக அருகே வந்த சஞ்சு சாம்சன்! (விடியோ)

இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 10 சிக்ஸர்கள் அடித்தார்...
அதிக சிக்ஸர்கள்: சாதனைக்கு மிக அருகே வந்த சஞ்சு சாம்சன்! (விடியோ)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

இரு அணிகளுக்கு இடையே ஆன ஐபிஎல் 11-வது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ரஹானே, ஆர்சி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரஹானே 36 ரன்களிலும், ஆர்சி ஷார்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 92 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பென்ஸ்டோக்ஸ் 27, ஜோஸ் பட்லர் 23, ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி மொத்தம் 217 ரன்களைக் குவித்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 198 ரன்களை மட்டுமே குவித்து தோல்வியைத் தழுவியது.

இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 10 சிக்ஸர்கள் அடித்தார். 

முரளி விஜய் 2010-ல் ராஜஸ்தானுக்கு எதிராக 11 சிக்ஸர்கள் அடித்தார். அதற்கு அடுத்ததாக ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சஞ்சு சாம்சன். 

ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள் - இந்திய வீரர்கள்

11 முரளி விஜய் (127 vs ராஜஸ்தான்) 2010
10 சஞ்சு சாம்சன் (92 vs பெங்களூரு) 2018
9 யுவ்ராஜ் (68* vs தில்லி) 2014
9 ரிஷப் பண்ட் (97 vs குஜராத்) 2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com