கிறிஸ் லின் 3 ரன்கள் எடுத்தால் 3 ஆயிரம் ரன்கள்: தினேஷ் கார்த்திக் பந்துவீச்சு தேர்வு

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கிறிஸ் லின் 3 ரன்கள் எடுத்தால் 3 ஆயிரம் ரன்கள்: தினேஷ் கார்த்திக் பந்துவீச்சு தேர்வு

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளுக்கு இடையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 முறையும் வெற்றிபெற்றுள்ளன. அவற்றில் ஜெய்பூரில் நடைபெற்ற ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 முறையும் வென்றுள்ளன.

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கிறிஸ் லின் 3 ரன்கள் எடுத்தால் 3 ஆயிரம் ரன்களையும், டி ஆர்கி 13 ரன்கள் எடுத்தால் ஆயிரம் ரன்களையும் கடந்தவர்கள் என்ற சாதனையைப் படைப்பார்கள். இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இரு அணிகள் விவரம் பின்வருமாறு:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), டி ஆர்கி ஷார்ட், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர், கே.கௌதம், பென் லாஃப்லின், ஷ்ரேயாஸ் கோபால், தாவால் குல்கர்னி, ஜெயதேவ் உனாட்கட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

சுனில் நரேன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஆண்ட்ரே ரசல், ஷிவம் மாவி, பியூஷ் சாவ்லா, டாம் குர்ரன், குல்தீப் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com