அதிரடி ஐபிஎல் சதம்: கிறிஸ் கெயில் நிகழ்த்திய சாதனைகள்!

கெயில் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு, 11 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 103 ரன்களை குவித்து...
அதிரடி ஐபிஎல் சதம்: கிறிஸ் கெயில் நிகழ்த்திய சாதனைகள்!

பஞ்சாப் கிங்ஸ் லெவன்-ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 16-வது ஆட்டம் நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதலில் டாஸ்வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 193 ரன்களை எடுத்தது. கெயில் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு, 11 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 103 ரன்களை குவித்தும், ஆரோன் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களையே எடுக்க முடிந்தது. இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. இதன் மூலம் தொடர் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தச் சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார் கிறிஸ் கெயில்.

கெய்ல் 104* ரன்கள்

63 பந்துகளில் 104* ரன்கள்

21 பந்துகளில் ரன் இல்லை.
26 ஒரு ரன்கள்
4 - 2 ரன்கள் 
1 - பவுண்டரி 
11 - சிக்ஸர்கள் 

* இது அவருடைய 6-வது ஐபிஎல் சதம். இந்த வருட ஐபிஎல்-லின் முதல் சதத்தை அடித்துள்ளார்.

* 2011-ல் ஏலத்தில் கிறிஸ் கெயிலை யாரும் தேர்வு செய்யவில்லை. அதன்பிறகு நானஸுக்குப் பதிலாக  பெங்களூர் அணிக்குத் தேர்வானார். அதன்பிறகு ஆடிய முதல் ஆட்டத்திலேயே சதமடித்தார்.
* இந்த வருட ஏலத்திலும் கிறிஸ் கெயிலை யாரும் தேர்வு செய்யவில்லை. கடைசிக்கட்டத்தில் பஞ்சாப் அணி தேர்வு செய்தது. இரண்டாவது ஆட்டத்தில் சதமடித்துவிட்டார். 

* ஐபிஎல் போட்டியில் 10-க்கும் அதிகமாக சிக்ஸர்களை நான்கு முறை அடித்துள்ளார் கெயில். மற்ற வீரர்கள் ஒருமுறைக்கு மேல் அடித்ததில்லை.

* கிறிஸ் கெயில் தன்னுடைய கடைசி 5 ஆட்டங்களில் 47 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

டி20 சதங்கள்

21 கிறிஸ் கெயில்
7 மெக்கல்லம், ரைட், கிலிங்கர்

டி20 ஆட்டத்தில் 10 சிக்ஸர்கள் அடித்தவர்கள்

16 முறை - கெயில்
2 முறை - ரஸல், மெக்கல்லம், லீவிஸ், ஷனகா

ரஷித் கானின் ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடித்தவர்கள்

டி வில்லியர்ஸ்
கிறிஸ் கெயில்

ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள்

கிறிஸ் கெயில் - 280
ரோஹித் சர்மா - 179
சுரேஷ் ரெய்னா - 174

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com