முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள ஐபிஎல் அணிகளுடன் தமிழகத்துக்கு உள்ள தொடர்பு!

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகளுடன் தமிழகம் நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளது...
முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள ஐபிஎல் அணிகளுடன் தமிழகத்துக்கு உள்ள தொடர்பு!

பஞ்சாப் கிங்ஸ் லெவன்-ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 16-வது ஆட்டம் நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதலில் டாஸ்வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 193 ரன்களை எடுத்தது. கெயில் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு, 11 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 103 ரன்களை குவித்தும், ஆரோன் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களையே எடுக்க முடிந்தது. இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. இதன் மூலம் தொடர் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ஐபிஎல்-லில் அனைத்து அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியைக் கண்டுள்ளன. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியின் முடிவுகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகளுடன் தமிழகம் நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளது.

* முதல் இடத்தைப் பிடித்துள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்.
* அடுத்த இடத்தில் உள்ள ஹைதரபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறன், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
* மூன்றாம் இடத்தில் உள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின்.
* நான்காம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை அணியின் சார்பாக ஐபிஎல்-லில் விளையாடுகிறது.

இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர்களின் பங்களிப்பு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெருமைப்படக்கூடியதாக அமைந்துள்ளது.

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண் அணிகள்ஆட்டங்கள்வெற்றிகள்தோல்விகள்புள்ளிகள்நெட் ரன்ரேட்
 1.  கொல்கத்தா  5 3 2 6 0.825
 2 ஹைதரபாத்  4 3 1 6 0.414
 3. பஞ்சாப் 4 3 1 6 0.277
 4. சென்னை 3 2 1 4 0.103
 5. ராஜஸ்தான் 4 2 2 4 -0.366
 6. மும்பை 4 1 3 2 0.445
 7. பெங்களூர் 4 1 3 2 -0.861
 8. தில்லி 4 1 3 2 -1.399

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com