சச்சின் பிறந்த நாளன்று மும்பை தோற்கலாமா?: ரசிகர்கள் அதிருப்தி!

சச்சின் பிறந்தநாளன்று நான்கு முறை ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது மும்பை அணி... 
சச்சின் பிறந்த நாளன்று மும்பை தோற்கலாமா?: ரசிகர்கள் அதிருப்தி!

நேற்று சச்சின் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். மும்பை அணியின் ஐகானாகவும் அவர் உள்ளதால் ஆட்டத்தைப் பார்க்க வான்கடே மைதானத்துக்கு வந்திருந்தார். அங்கு கேக் வெட்டி தனது பிறந்தநாளை ரசிகர்களின் முன்னிலையில் கொண்டாடினார். ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைச் சச்சினுக்குத் தெரிவித்தார்கள். இதனால் நேற்றைய ஆட்டம் மும்பை ரசிகர்களுக்கு ஒருவிதத்தில் கொண்டாட்டமாகவே அமைந்தது.

எனினும் நேற்றைய ஆட்டம் சச்சினுக்கும் மும்பை ரசிகர்களுக்கும் ஆதரவாக அமையவில்லை. மும்பை அணி படுதோல்வியைச் சந்தித்தது. இரு அணிகளும் சேர்த்தே 205 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

2011 முதல் நேற்றுவரை சச்சின் பிறந்தநாளன்று நான்கு முறை ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது மும்பை அணி. இந்த நான்கில் இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் கிடைத்துள்ளன. கடந்த
வருடமும் நேற்றும் சச்சின் பிறந்தநாளன்று நடைபெற்ற ஆட்டங்களில் மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. ஆனால் 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் அதே நாளில் சச்சின் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தபோது வெற்றி கண்டுள்ளது மும்பை அணி.

2011-ல் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 28 ரன்கள் எடுத்தார் சச்சின். 2013-ல் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் இந்த இரு ஆட்டங்களும் மும்பைக்கு வெளியே ஹைதரபாத்திலும் கொல்கத்தாவிலும் நடைபெற்றன. ஆனால், கடந்த வருடமும் இந்த வருடமும் மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் பிறந்தநாளன்று நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. 

சச்சின் பிறந்தநாளன்று மும்பை அணி விளையாடுவதாக இருந்தால், சச்சினுக்கு மரியாதை தரும் விதமாக அன்றைய தினம் அந்த அணி வெற்றி பெறவேண்டும் என்பதே சச்சின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இல்லாவிட்டால் சச்சின் பிறந்தநாளன்று மும்பை அணி விளையாடுவதைத் தவிர்க்கலாம். அன்றைய தினம் சச்சின் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே சச்சின் ரசிகர்களின் முதன்மையான விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com