பவுண்டரிகளை விடவும் அதிக சிக்ஸர்கள்: சென்னை - பெங்களூர் ஆடிய பரபரப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

இந்த ஆட்டத்தில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. பவுண்டரிகளை விடவும் சிக்ஸர்களே அதிகம்... 
பவுண்டரிகளை விடவும் அதிக சிக்ஸர்கள்: சென்னை - பெங்களூர் ஆடிய பரபரப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சென்னை அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 24-வது ஆட்டம் பெங்களூருவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.  டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் தாகுர், தாஹிர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை அணி சார்பில் கேப்டன் தோனி-அம்பதி ராயுடு இணை பெங்களூரு அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர். ராயுடு 8 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை சிராஜ் வீசினார். அதில் தோனி ஒரு சிக்ஸரை விளாசினார். 3 வைடு பந்துகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 14 ரன்களை பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ, தோனி ஆகியோர் அதிரடியாக சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியாக 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களுடன் சென்னை வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் சஹால்2 விக்கெட்டுகளையும், பவன் நேகி, உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. பவுண்டரிகளை விடவும் சிக்ஸர்களே அதிகம். 18 பவுண்டரிகள். டி20 ஆட்டங்களில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதில் இது 2-ம் இடம். 2016-ல் நியூ பிளைமெளத்தில் நடைபெற்ற செண்ட்ரல் டிஸ்டிரிக்ஸ் - ஒடகோ இடையேயான ஆட்டத்தில் 34 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஐபிஎல் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதும் நேற்றுதான்.  இதனால் பெங்களூர் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com