ஆசிய கண்டத்துக்கு வெளியே தொடரும் தவன் சொதப்பல்கள்

அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஷிகர் தவனின் ஆட்டம் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 
ஆசிய கண்டத்துக்கு வெளியே தொடரும் தவன் சொதப்பல்கள்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 2-ஆம் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்தது. இதில் துவக்க வீரர் ஷிகர் தவன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனால் அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆட்டம் தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதிரடி ஆட்டக்காரரான தவன், ஒருநாள் மற்றும் டி20-களில் ரன்கள் சேர்த்தாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடங்கிய சில நிமிடங்களில் குறைந்த ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 22 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 அரைசதம் மற்றும் 1 சதத்துடன் 612 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 27.81ஆகும்.

இந்நிலையில், ஆசிய கண்டத்துக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் தவன் எடுத்துள்ள ரன்களின் விவரம்:

13 - ஜொஹன்னஸ்பர்க், 2013
00 - ஆக்லாந்து, 2014  
12 - டிரெண்ட் பிரிட்ஜ், 2014
25 - அடிலெய்ட், 2014
84 - நார்த் சௌன்ட், 2016
16 - கேப்டவுன், 2018
26 - பார்மிங்ஹம், 2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com