இங்கிலாந்து அணிக்கு சமீபகாலங்களில் வலுவான நிலையில் இருந்து ஏற்பட்ட பெரும் சறுக்கல்கள் 

 ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. 
இங்கிலாந்து அணிக்கு சமீபகாலங்களில் வலுவான நிலையில் இருந்து ஏற்பட்ட பெரும் சறுக்கல்கள் 

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 7 விக்கெட்டுகளை 71 ரன்களுக்கு இழந்தது. இதனால் பெரிய ஸ்கோர் சேர்க்கும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு பெரும் சரிவைக் கண்டுள்ளது. 

சமீபகாலங்களில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கல்களின் விவரம் பின்வருமாறு:

  • இந்தியாவுக்கு எதிராக, எட்பாஸ்டன்: 216/3-ல் இருந்து 287-க்கு ஆட்டமிழப்பு (71/7)
  • பாகிஸ்தானுக்கு எதிராக, லார்ட்ஸ்: 149/4-ல் இருந்து 184-க்கு ஆட்டமிழப்பு (35/6)
  • நியூஸிலாந்துக்கு எதிராக, ஆக்லாந்து: 58-க்கு ஆட்டமிழப்பு
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, சிட்னி: 228/3-ல் இருந்து 346-க்கு ஆட்டமிழப்பு (118/7)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பெர்த்: 368/4-ல் இருந்து 403-க்கு ஆட்டமிழப்பு (35/6)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அடிலெய்ட்: 169/3-ல் இருந்து 233-க்கு ஆட்டமிழப்பு (64/7)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிரிஸ்பேன்: 246/4-ல் இருந்து 302-க்கு ஆட்டமிழப்பு (56/6)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com