ஒரு டஜன் அரைசதங்களுடன் 6 ஆயிரம் ரன்கள்: ஜோ ரூட் சாதனை விவரங்கள்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒரு அணிக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 12 அரைசதங்கள் எடுத்தது மட்டுமல்லாமல் 6 ஆயிரம் ரன்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். 
ஒரு டஜன் அரைசதங்களுடன் 6 ஆயிரம் ரன்கள்: ஜோ ரூட் சாதனை விவரங்கள்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒரு அணிக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 12 அரைசதங்கள் எடுத்தது மட்டுமல்லாமல் 6 ஆயிரம் ரன்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அரைசதம் அடித்த வீரர்கள்:

  • ஜோ ரூட், இங்கிலாந்து - இந்தியாவுக்கு எதிராக 12 அரைசதங்கள்
  • என்.ஹார்வி, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • ஜே.எட்ரிச், இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • டி.வால்டர்ஸ், ஆஸ்திரேலியா - மே.இ.தீவுகளுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • மஹேலா ஜெயவர்தனே, இலங்கை - இந்தியாவுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • குமார் சங்ககாரா, இலங்கை - பாகிஸ்தானுக்கு எதிராக 9 அரைசதங்கள் 

குறைந்த வயதில் 6 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - 26 வயது 313 நாட்கள்
  • அலிஸ்டர் கூக் - 27 வயது 43 நாட்கள்
  • ஜோ ரூட் - 27 வயது 214 நாட்கள்
  • கிரீம் ஸ்மித் - 27 வயது 323 நாட்கள்
  • ஸ்டீவ் ஸ்மித் - 28 வயது 217 நாட்கள்
  • டி வில்லியர்ஸ் - 28 வயது 329 நாட்கள்

அறிமுகப் போட்டியில் இருந்து குறைந்த நாட்களில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள்:

  • ஜோ ரூட் - 2058 நாட்கள்
  • அலிஸ்டர் கூக் - 2168 நாட்கள்
  • கெவின் பீட்டர்சன் - 2192 நாட்கள்
  • டேவிட் வார்னர் - 2216 நாட்கள்
  • ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் - 2410 நாட்கள்
  • கிரீம் ஸ்மித் - 2479 நாட்கள்

குறைந்த இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள்:

  • டபள்யூ.ஹாம்மன்ட் - 114 இன்னிங்ஸ்
  • எல்.ஹீட்டன், கே.பாரிங்டன் - 116 இன்னிங்ஸ்
  • ஜோ ரூட் - 127 இன்னிங்ஸ்
  • கெவின் பீட்டர்சன் - 128 இன்னிங்ஸ்
  • அலிஸ்டர் கூக் - 131 இன்னிங்ஸ்

ஒரு அணிக்கு எதிராக விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் (6 அல்லது அதற்கு மேற்கபட்ட டெஸ்ட் போட்டிகள்) அரைசதம் கடந்த வீரர்கள்:

  • ஜோ ரூட் - இந்தியாவுக்கு எதிராக - 12 அரைசதங்கள்
  • டி.வால்டர்ஸ் - மே.இ.தீவுகளுக்கு எதிராக - 9 அரைசதங்கள்
  • ஜோ ரூட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக - 8 அரைசதங்கள்
  • ஹபிபுல் பாஷர் - பாகிஸ்தானுக்கு எதிராக - 6 அரைசதங்கள்
  • ஜாக்குஸ் கலீஸ் - ஜிம்பாப்வே-வுக்கு எதிராக - 6 அரைசதங்கள்
  • தமீம் இக்பால் - இங்கிலாந்துக்கு எதிராக - 6 அரைசதங்கள்
  • முகமது யூசுப் - ஜிம்பாப்வே-வுக்கு எதிராக - 6 அரைசதங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com