இங்கிலாந்து அணியின் சாதனைகளும், சோதனைகளும்!

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒரு அணிக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 12 அரைசதங்கள் எடுத்தது மட்டுமல்லாமல் 6 ஆயிரம் ரன்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். 
இங்கிலாந்து அணியின் சாதனைகளும், சோதனைகளும்!

சமீபகாலங்களில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கல்களின் விவரம் பின்வருமாறு:

  • இந்தியாவுக்கு எதிராக, எட்பாஸ்டன்: 216/3-ல் இருந்து 287-க்கு ஆட்டமிழப்பு (71/7)
  • பாகிஸ்தானுக்கு எதிராக, லார்ட்ஸ்: 149/4-ல் இருந்து 184-க்கு ஆட்டமிழப்பு (35/6)
  • நியூஸிலாந்துக்கு எதிராக, ஆக்லாந்து: 58-க்கு ஆட்டமிழப்பு
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, சிட்னி: 228/3-ல் இருந்து 346-க்கு ஆட்டமிழப்பு (118/7)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பெர்த்: 368/4-ல் இருந்து 403-க்கு ஆட்டமிழப்பு (35/6)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அடிலெய்ட்: 169/3-ல் இருந்து 233-க்கு ஆட்டமிழப்பு (64/7)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிரிஸ்பேன்: 246/4-ல் இருந்து 302-க்கு ஆட்டமிழப்பு (56/6)

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒரு அணிக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 12 அரைசதங்கள் எடுத்தது மட்டுமல்லாமல் 6 ஆயிரம் ரன்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். 

ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அரைசதம் அடித்த வீரர்கள்:

  • ஜோ ரூட், இங்கிலாந்து - இந்தியாவுக்கு எதிராக 12 அரைசதங்கள்
  • என்.ஹார்வி, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • ஜே.எட்ரிச், இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • டி.வால்டர்ஸ், ஆஸ்திரேலியா - மே.இ.தீவுகளுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • மஹேலா ஜெயவர்தனே, இலங்கை - இந்தியாவுக்கு எதிராக 9 அரைசதங்கள்
  • குமார் சங்ககாரா, இலங்கை - பாகிஸ்தானுக்கு எதிராக 9 அரைசதங்கள் 

குறைந்த வயதில் 6 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - 26 வயது 313 நாட்கள்
  • அலிஸ்டர் கூக் - 27 வயது 43 நாட்கள்
  • ஜோ ரூட் - 27 வயது 214 நாட்கள்
  • கிரீம் ஸ்மித் - 27 வயது 323 நாட்கள்
  • ஸ்டீவ் ஸ்மித் - 28 வயது 217 நாட்கள்
  • டி வில்லியர்ஸ் - 28 வயது 329 நாட்கள்

அறிமுகப் போட்டியில் இருந்து குறைந்த நாட்களில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள்:

  • ஜோ ரூட் - 2058 நாட்கள்
  • அலிஸ்டர் கூக் - 2168 நாட்கள்
  • கெவின் பீட்டர்சன் - 2192 நாட்கள்
  • டேவிட் வார்னர் - 2216 நாட்கள்
  • ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் - 2410 நாட்கள்
  • கிரீம் ஸ்மித் - 2479 நாட்கள்

குறைந்த இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள்:

  • டபள்யூ.ஹாம்மன்ட் - 114 இன்னிங்ஸ்
  • எல்.ஹீட்டன், கே.பாரிங்டன் - 116 இன்னிங்ஸ்
  • ஜோ ரூட் - 127 இன்னிங்ஸ்
  • கெவின் பீட்டர்சன் - 128 இன்னிங்ஸ்
  • அலிஸ்டர் கூக் - 131 இன்னிங்ஸ்

ஒரு அணிக்கு எதிராக விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் (6 அல்லது அதற்கு மேற்கபட்ட டெஸ்ட் போட்டிகள்) அரைசதம் கடந்த வீரர்கள்:

  • ஜோ ரூட் - இந்தியாவுக்கு எதிராக - 12 அரைசதங்கள்
  • டி.வால்டர்ஸ் - மே.இ.தீவுகளுக்கு எதிராக - 9 அரைசதங்கள்
  • ஜோ ரூட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக - 8 அரைசதங்கள்
  • ஹபிபுல் பாஷர் - பாகிஸ்தானுக்கு எதிராக - 6 அரைசதங்கள்
  • ஜாக்குஸ் கலீஸ் - ஜிம்பாப்வே-வுக்கு எதிராக - 6 அரைசதங்கள்
  • தமீம் இக்பால் - இங்கிலாந்துக்கு எதிராக - 6 அரைசதங்கள்
  • முகமது யூசுப் - ஜிம்பாப்வே-வுக்கு எதிராக - 6 அரைசதங்கள்

ஜோ ரூட் கடந்த 10 முறையாக 2-ஆவது இன்னிங்ஸில் எடுத்த ரன்கள்:

  • 14
  • 50
  • 49
  • 72
  • 51
  • 67
  • 14
  • 58*
  • 51
  • 54

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 2,500 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

  • ஷகிப்-அல்-ஹசன் - 37 டெஸ்ட்
  • டி.கோட்டார்ட், டி.கிரெய்க் - 40 டெஸ்ட்
  • பென் ஸ்டோக்ஸ் - 43 டெஸ்ட்
  • கி.மில்லர், ஜி.சோபர்ஸ் - 48 டெஸ்ட்

தனது கிரிக்கெட் வாழ்வில் விளையாடியுள்ள 157 டெஸ்ட் போட்டிகளில் அலிஸ்டர் கூக், ஒரு டெஸ்ட் போட்டியன் இரு இன்னிங்ஸிலும் போல்ட் முறையில் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. 

8-ஆவது வரிசையில் களமிறங்கி அரைசதம் கடந்த இளம் இங்கிலாந்து வீரர்கள்:

  • 19 வருடம் 314 நாட்கள் - ஹெச்.ஹமீத் v இந்தியா, மொஹாலி, 2016
  • 20 வருடம் 061 நாட்கள் -  சாம் கர்ரன் v இந்தியா, எட்பாஸ்டன், 2018
  • 20 வருடம் 306 நாட்கள் -  டி.பெஸ் v பாகிஸ்தான், லார்ட்ஸ், 2018
  • 21 வருடம் 040 நாட்கள் -  ஜெ.கிராஃபோர்ட் v ஆஸ்திரேலியா, அடிலெய்ட், 1908

இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் இளம் வயதில் ஆட்ட நாயகன் விருது வென்றவர் என்னும் பெருமைக்குரியவராக சாம் கர்ரன் திகழ்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com