இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் வியத்தகு சாதனைகள்!

2014-ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மொத்தம் 10 இன்னிங்ஸில் விராட் கோலி சந்தித்த மொத்த பந்துகளின் எண்ணிக்கை 288. இந்நிலையில், தற்போதைய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே 318 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் வியத்தகு சாதனைகள்!

கடந்த 2014-ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மொத்தம் 10 இன்னிங்ஸில் விராட் கோலி சந்தித்த மொத்த பந்துகளின் எண்ணிக்கை 288. இந்நிலையில், தற்போதைய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே 318 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

விராட் கோலி முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த பின்னர் 150 ரன்களுக்குள்ளாக 9 முறை ஆட்டமிழந்துள்ளார். அடுத்த 11 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த பின்னர் 150 ரன்களுக்குள்ளாக ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். இதில் கடந்த 2015 ஆகஸ்ட் முதல் எடுத்த 12 சதங்களைிலும் 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த இந்திய கேப்டன்கள்:

  • 179 முகமது அசாருதீன், மான்சஸ்டர், 1990
  • 149 விராட் கோலி, எட்பாஸ்டன், 2018
  • 148 எம்.ஏ.கே.பட்டோடி, லீட்ஸ், 1967
  • 128 சௌரவ் கங்குலி, லீட்ஸ், 2002
  • 121 முகமது அசாருதீன், லார்ட்ஸ், 1990

இந்திய அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த மொத்த ரன்களில் கேப்டன்களின் பங்குகள் (சராசரி உட்பட):

  • 55.41 மகேந்திர சிங் தோனி (82/148) v இங்கிலாந்து, ஓவல், 2014
  • 54.37 விராட் கோலி (149/274) v இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2018 
  • 49.84 விராட் கோலி (153/307) v தென் ஆப்பிரிக்கா, செஞ்சூரியன், 2018
  • 49.52 முகமது அசாருதீன் (103*/208) v நியூஸிலாந்து, வெலிங்டன், 1998

ஒரு இன்னிங்ஸில் இதர இந்திய வீரர்கள் 30 ரன்கள் தாண்டாத நிலையில் விராட் கோலியின் 149 ரன்கள் 2-ஆவது அதிகபட்சமாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வி.வி.எஸ்.லஷ்மண் எடுத்த 167 ரன்கள் தான் அதிகபட்சமாக உள்ளது. 3-ஆவது இடத்தில் சௌரவ் கங்குலியின் 25 ரன்கள் உள்ளது.

10-ஆவது விக்கெட்டுக்கு இந்திய அணி அதிகபட்ச ரன்கள் (57 ரன்கள், விராட் கோலி - உமேஷ் யாதவ்) எடுத்தது இது 11-ஆவது முறையாகும். கடைசியாக, இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் தோனி, இஷாந்த் ஜோடி 10-ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்திருந்தது.

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இதுவரை எடுத்த ரன்கள் (இன்னிங்ஸ் வாரியாக): 

  • 51
  • 149
  • 39
  • 28
  • 25
  • 20
  • 8
  • 7
  • 6
  • 1
  • 0
  • 0

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் இந்திய கேப்டன்கள் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள்:

  • 212 ரன்கள் - எம்.ஏ.கே.பட்டோடி (64 & 148), லீட்ஸ், 1967
  • 200 ரன்கள் - விராட் கோலி (149 & 51*), எட்பாஸ்டன், 2018
  • 190 ரன்கள் - முகமது அசாருதீன் (179 & 11), மான்சஸ்டர், 1990
  • 167 ரன்கள் - சௌரவ் கங்குலி (68 & 99), டிரெண்ட் பிரிட்ஜ், 2002

இதர வீரர்கள் 49 ரன்களை தாண்டாத நிலையில், இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்த இந்திய வீரர்கள்:

  • திலிப் வெங்சர்கார் 61 & 102* v இங்கிலாந்து, லீட்ஸ், 1986
  • சச்சின் டெண்டுல்கர் 116 & 52 v ஆஸ்திரேலியா, எம்.சி.ஜி., 1999
  • சச்சின் டெண்டுல்கர் 76 & 65 v ஆஸ்திரேலியா, மும்பை வான்கடே, 2001
  • ராகுல் டிராவிட் 81 & 68 v மே.இ.தீவுகள், கிங்ஸ்டன், 2006
  • மகேந்திர சிங் தோனி 77 & 74 v இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2011
  • விராட் கோலி 149 & 51 v இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2018

ஒரு டெஸ்டில் இந்திய அணியின் மொத்த ரன்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள வீரர்கள்:

  • 45.87 சதவீதம் - விராட் கோலி (200/436) v இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2018
  • 43.71 சதவீதம் -  சுனில் கவாஸ்கர் (344/787) v மே.இ.தீவுகள், பி.ஓ.எஸ்., 1971
  • 42.34 சதவீதம் - வி.வி.எஸ்.லஷ்மன் (174/411) v ஆஸ்திரேலியா, எஸ்.சி.ஜி., 2000
  • 41.97 சதவீதம் -  வீரேந்திர சேவாக் (251/598) v இலங்கை, காலே, 2008
  • 41.76 சதவீதம் -  வினு மான்கட் (256/613) v இங்கிலாந்து, லார்ட்ஸ், 1952

ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அதிகமுறை அதிக ரன்கள் அடித்துள்ள இந்திய வீரர்கள்:

  • 8 முறை - சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட்
  • 6 முறை - சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com